றெடுத்தேன் மன்ற யானே கொடுத்தோர் மன்றவுவ ளாயத் தோரே." எனவும் வரும். செவிலி தன்னறிவின்மைதன்னை நொந்துரைத்தற்குச் செய்யுள்: 1"வழியா வரும்பெரு நீர்த்தஞ்சை வாணனை வாழ்த்தலர்போற் கழியாத வன்புடைக் காளைபின் னாளைக் கலந்துகொண்டல் பொழியாத வெஞ்சுரம் போகுவல் யானென்று போங்குறிப்பால் ஒழியாதென் முன்புசொன் னாள்பேதை யேனொன்றை யோர்ந்திலனே." எனவும், 2"முலைக்கண்ணு முத்துமுழுமெய்யும் புல்லும் இலக்கணம் யாது மறியேன் - கலைக்கணம் வேங்கை வெரூஉ நெறிசெலிய போலுமென் பூம்பாவை செய்த குறி." எனவும் வரும். செவிலி தெய்வம் வாழ்த்தற்குச் செய்யுள்: 3"இணங்கிப் புவனத் தெவருமில் லாவென் | னிளங்கொடியாள் | உணங்கிக் கழித லொழியவென் பால்வர | வுன்னையன்பால் | வணங்கிப் பலமுறை வாழ்த்துகின் றேன்றஞ்சை | வாணன்றெவ்வை | யணங்கித் திரள்புயத் தான்மல யாசலத் | தாரணங்கே." |
எனவும், 4"ஞாயிறு 5காயாது மரநிழற் பட்டு மலைமுதற் சிறுநெறி மணன்மிகத் தாஅய்த் தண்மழை தலையின் றாக 6நந்நீத்துச் 7சுடர்வாய் நெடுவேற் காளையொடு 8மடவர லரிவை போகிய சுரனே." எனவும் வரும். (14)
1. த. கோ. செ : 326. 2. நாலடியார், செ :339. 3. த. கோ. செ : 327. 4. குறு. செ : 378. (பாடம்) 5. 'காணாத மானிழற்படீஇ.' 6. 'தண்ணளி.' 7. 'சுடர்படு.' 8. 'மடமாவரிவை.'
|