223

நற்றாய் புலம்பல்

185. செவிலி யறத்தொடு நிற்றலிற் கவலையிற்
பாங்கி தன்னொடும் பாங்கியர் தம்மொடும்
அயலார் தம்மொடும் பயிலிடந் தம்மொடும்
தாங்கல ளாகிச் சாற்றிய வெல்லாம்
பூங்கொடி நற்றாய் புலம்பற் குரிய.

(இ - ம்.) நற்றாய் புலம்பலின்விரி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) செவிலி அறத்தொடு நிற்றலிற் கவலையிற்பாங்கி தன்னொடு புலம்பல்முதலாகப் பயிலிடந் தன்னொடு புலம்பல் ஈறாகச் சொல்லப்பட்டனவெல்லாம் தலைமகள் நற்றாய் புலம்பற்குரியவாம் என்றவாறு.

அவற்றுள், செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நிற்றற்குச் செய்யுள்:

1"சகநல்க வந்தருள் சந்திர வாணன்றென் றஞ்சைநல்லாய்
முகநல்கி நல்க முலைகொடுத் தாரின்முத் தங்கொடுத்தார்
மிகநல்ல ரென்பது மன்பதை தேற விடலைபின்னே
மகநல்கு மந்தியங் கானடந் தாளுன் மடந்தையின்றே."

எனவும்,

2"பறைபடப் பணில மார்ப்ப விறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி யாய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே."

எனவும் வரும்.

நற்றாய் பாங்கி தன்னொடு புலம்பற்குச் செய்யுள்:

3"முன்னே யிதனை மொழிந்தனை யேனுந்தை முந்தைமணம்
பின்னேய் குழலி பெறாளல்ல ளேபிற ழாதெவர்க்குந்
தன்னேயம் வைத்தரு ளுந்தஞ்சை வாணன் றமிழ்ச்சிலம்பிற்
பொன்னே யனையநல் லாயவ மேசுரம் போக்கினையே."

எனவும்,


1. த. கோ. செ : 328.

2. குறு. செ : 15.

3. த. கோ. செ : 329.