224

1"தன்னம ராயமொடு நன்மண நுகர்ச்சியி
னினிதாங் கொல்லோ தனக்கே பனிவரை
யினக்களிறு வழங்குஞ் சோலை
வயக்குறு வெள்வே லவற்புணர்ந்து செலவே."

எனவும் வரும்.

அதுகேட்ட தோழி அழுங்கல் கண்டு நற்றாய் புலம்பற்குச் செய்யுள்:

2"இல்லுங் கழங்கா டிடங்களு நோக்கி

யிரங்கல்வம்பும்

வல்லும் பொருங்கொங்கை மங்கைநல் லாய்தஞ்சை

வாணனொன்னார்

புல்லுந் துணைவியர் போல்வினை யேன்பெற்ற

பூவையன்னாள்

செல்லுஞ் சுரத்தழ லன்றுன்கண் ணீரெற்

றெறுகின்றதே."

எனவும்,

3"செல்லிய முயலிப் பாஅய சிறகர்
வாவ லுகக்கு மாலையாம் புலம்பப்
போகிய வவட்கோ நோவேன் றேமொழித்
துணையிலள் கலிழு நெஞ்சி
னிணையே ருண்க ணிவட்குநோ வதுவே."

எனவும் வரும்.

நற்றாய் பாங்கியர் தம்மொடு புலம்பற்குச் செய்யுள்:

4"நேயம் புணைதுணை யாகவெங் கானக நீந்தலெண்ணி
யாயம் புலம்ப வகன்றன ளோகல் லகங்குழைய
மாயம் புகலொரு காளைபின் வாணன்றென் மாறையன்னீர்
சேயம் புயமலர் போலடி நோவவென் சில்வளையே."

எனவும்,

5"இதுவென் பாவைக் கினியநற் பாவை
இதுவென் பைங்கிளி யெடுத்த பைங்கிளி
இதுவென் பூவைக் கினியசொற் பூவையென்று


1. ஐங்குறு, செ : 379.

2. த. கோ. செ : 330.

3. ஐங்குறு. செ : 378.

4. த. கோ. செ : 331.

5. ஐங்குறு. செ : 375.