அலமரு நோக்கி னலம்வரு சுடர்நுதல் காண்டொறுங் காண்டொறுங் கலங்க நீங்கின ளோவென் பூங்க ணோளே." எனவும் வரும். நற்றாய் அயலார் தம்மொடு புலம்பற்குச் செய்யுள்: 1"மேனாள் வரங்கிடந் தென்போல் வருந்தி மிகவுமெய்ந்நொந்து ஈனா தவர்துன்ப மெய்துவ ரோவிமை யோருலகந் தானாண நீடு மதிற்றஞ்சை வாணன் தமிழ்ச்சிலம்பின் மானார் விழியனை யாள்விளை யாடிய வண்டல்கண்டே." எனவும், 2"ஒருமக ளுடையேன் மன்னே யவளுஞ் செருமிகு 3மொய்ம்பிற் கூர்வேற் காளையொடு பெருமலை யருஞ்சுர நெருநற் சென்றனள் இனியே, தாங்குநின் னவல மென்றீ ரதுமற் றியாங்கன மொல்லுமோ வறிவுடை யீரே யுள்ளி னுள்ளம் வேமே யுண்கண் மணிவாழ் பாவை நடைகற் றன்னவென் அணியியற் குறுமக ளாடிய மணியேர் நொச்சியுந் தெற்றியுங் கண்டே." எனவும் வரும். நற்றாய், தலைமகள் பயிலிடந் தம்மொடு புலம்பற்குச் செய்யுள்: 4"செயலைத் தருவின் றிருநிழ லேபெருஞ் சிற்றில்லமே வயலைக் கொடிநொச்சி மண்டப மேதஞ்சை வாணனொன்னார் இயலைத் தனித்தனி தந்தன ளேநமக் கின்றிதன்றோ கயலைப் பொருதகண் ணாள்மேலும் வாழ்விக்குங் கட்டளையே." எனவும், 5"கொன்றாய் குருந்தே கொடிமுல்லாய் வாடினீர் நின்றே னறிந்தே னெடுங்கண்ணாள் - சென்றாளுக் கென்னுரைத்தீர்க் கென்னுரைத்தாட் கென்னுரைத்தீர்க் கென்னுரைத்த மின்னிரைத்த பூண்மிளிர விட்டு." எனவும் வரும். (15)
1. த. கோ. செ : 332. 2. நற்றிணை, செ : 184. (பாடம்) 3. 'முன்பிற்.' 4. த. கோ. செ : 333. 5. திணைமாலை நூற், செ : 81.
|