நற்றாய் சுரந்தணிவித்தற்குச் செய்யுள்: 1வெஞ்சுர நாடு வியன்சுர லோகமும் வெங்கடுங்கா னைஞ்சுர தாரு வனங்களு மாக வகிற்புகைபோல் மஞ்சுர வாடக மாமதில் சூழ்தஞ்சை வாணன்வெற்பிற் பஞ்சுர மாகு மொழிச்சுரு ளோதியென் பைந்தொடிக்கே," எனவும், 2மள்ளர் கொட்டின் மஞ்ஞை யாலும் உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச் சுரநனி யினிய வாகுக தில்ல அறநெறி யிதுவெனத் தெளிந்தவென் பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே." எனவும் வரும். நற்றாய் தன்மகள் மென்மைத்தன்மைக்கு இரங்கற்குச் செய்யுள்: 3தாமே தமக்கொப்பு மற்றில் லவர்தில்லைத் தண்ணனிச்சப் பூமேன் மிதிக்கிற் பதைத்தடி பொங்குநங் காயெரியுந் தீமே லயில்போற் செறிபரற் கானிற் சிலம்படிபா யாமே நடக்க வருவினை யேன்பெற்ற அம்மனைக்கே." எனவும், 4உவக்கின்ற வல்லி மலர்த்தாளென் கண்களி லொற்றிக்கண்கள் சிவக்கின்ற தற்குமுன் னேசிவந் தேறுஞ் செயலதன்றோ பவக்குன் றிடிப்பவ ராரூர்த் தியாகர் பனிவரைமேல் நிவக்கின்ற வெஞ்சுரத் தேசென்ற வாறென் னினைப்பதுவே." எனவும்,
  5அரக்காம்ப னாறும்வா யம்மருங்கிற் கன்னோ பரற்கான மாற்றின கொல்லோ - அரக்கார்ந்த பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென் றஞ்சிப்பின் வாங்கு மடி." எனவும் வரும்.
  
 1. த. கோ. செ : 335. 2. ஐங்குறு, செ : 371. 3. திருக்கோவையார், செ : 228. 4. திருவாரூர்க் கோவை, 395. 5. நாலடியார், செ : 396. 
 |