228

நற்றாய் தன்மகள் இளமைத்தன்மைக்கு உளமெலிந்திரங்கற்குச்
செய்யுள்:

1இரும்பா மனங்கொண்ட வாறென்னை நீதன்னை யேத்தியென்றும்
வரும்பா வலர்க்கருள் வாணன்றென் மாறை வளவயலிற்
கரும்பார் மொழியா யழலென்று கண்ணீர் துடைத்தணைத்துன்
அரும்பா முலைசெய்ய வாய்ப்பசும் பாவைக் களிக்குமின்னே."

எனவும்,

2பல்லூழ் நினைப்பினு நல்லென் றூழ
மீளி முன்பிற் காளை காப்ப
முடியகம் புகாஅக் கூந்தலள்
கடுவனு மறியாக் காடிறந் தோளே."

எனவும் வரும்.

நற்றாய் தன்மகள் அச்சத்தன்மைக்குஅச்சமுற்றிரங்கற்குச் செய்யுள்:

3"நாண்மா தவிமலர் நாறிருங் கூந்த னடந்தவழிக்
கோண்மா குமிறுங்கொடுங்குரல் கேட்டொறுங் கூர்ங்கணையால்
வாண்மா முனைவென்ற வாணன்றென்மாறை மணிவரைவேய்த்
தோண்மா வெருவுங்கொல் லோவென்றெ னாருயிர்சோர் கின்றதே."

எனவும்,

4"கேளாய் வாழியோ மகளைநின் றோழி
திருநகர் வரைப்பகம் புலம்ப வவனொடு
பெருமலை யிறந்தது நோவே னோவல்
கடுங்கண் யானை நெடுங்கை சேர்த்தி
முடங்குதா ளுதைத்த பொலங்கெழு பூழி
பெரும்புலர் விடியல் விரிந்துவெயி லெறிப்பக்
கருந்தார் மிடற்ற செம்பூழ்ச் சேவல்
சிறுபுன் பெடையொடு குடையு மாங்க
ணஞ்சுவரத் தகுந கான நீந்திக்
கன்றுகா ணாதுபுன் கண்ண செவிசாய்த்து
மன்றுநிறை பைதல் கூரப் பலவுடன்
கறவை தந்த கடுங்கண் மறவர்
கல்லென் சீறூ ரெல்லியி னசைஇ
முதுவாய்ப் பெண்டின் செதுகாற் குரம்பை.


1. த. கோ. செ : 337.

2. ஐங்குறு. செ : 374.

3. த. கோ. செ : 388.

4. அகம். செ : 63.