229

மடமயி லன்னவென் னடைமலி பேதை
தோட்டுணை யாகத் துயிற்றத் துஞ்சாள்
வேட்டக் கள்வர் விசியுறு கடுங்கட்
சேக்கோ ளறையுந் தண்ணுமை
கேட்குநள் கொல்லெனக் கலுழுமென் னெஞ்சே."

(16)

எனவும் வரும்.

கண்டோர் இரங்கல்

187. ஆயமும் தாயும் அழுங்கக் கண்டோர்
காதலின் இரங்கல் கண்டோ ரிரக்கம்.

(இ - ம்.) கண்டோரிரக்கம் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) தலைமகள் ஆயத்தாரும், நற்றாயும் இரங்குமாறு கண்டு அன்பினால் இரங்குதல் கண்டோரிரக்கம் என்றவாறு.

அதற்குச் செய்யுள்:

1நொந்துங் கலுழ்ந்துந் துணைவிய ராற்றலர் நோக்கொடின் சொல்
தந்துங் கவையுந் தணந்துசென் றாளெனத் தாள்பணியார்
மைந்துங் கதமுங் கடிந்தருள் வாணன்றென் மாறையன்னாள்
பந்துங் கழங்குமெல் லாங்கண்டு வாழும் பயந்தவளே."

எனவும்,

2கயந்தலை மடப்பிடி பயம்பிற் பட்டெனக்
களிறுவிளிப் படுத்த கம்பலை வெரீஇ
யொய்யென வெழுந்த செவ்வாய்க் குழவி
தாதெரு மறுகின் மூதூ ராங்கண்
எருமை நல்லான் பெருமுலை மாந்தும்
நாடுபல விறந்த நன்ன ராட்டிக்
காயமு மணியிழந் தழுங்கின்று தாயும்
ஈன்றோட் டாரா யிறீ இயரென் னுயிரெனக்
கண்ணு நுதலு நீவித் தண்ணெனத்
தடவுநிலை நொச்சி வரிநிழ லசைஇத்
தாழிக் குவளை வாடுமலர் சூடித்
தருமணற் கிடந்த பாவையென்
அருமக ளேயென முயங்கின ளழுமே."

(17)

எனவும் வரும்.


1. த. கோ. செ : 339.

2. அகம். செ : 165.