செவிலி பின்தேடிச் செல்லல் 188. ஆற்றாத் தாயைத் தேற்றலும் ஆற்றிடை முக்கோற் பகவரை வினாதலும் மிக்கோர் ஏதுக் காட்டலும் எயிற்றியொடு புலம்பலும் குரவொடு புலம்பலும் சுவடுகண் டிரங்கலும் கலந்துடன் வருவோர்க் கண்டுகேட் டலும்அவர் புலம்பல் தேற்றலும் புதல்வியைக் காணாது கவலைகூர் தலும்எனும் இவையொன் பானும் செவிலிபின் தேடிச் சேறற் குரிய. (இ - ம்.) செவிலி பின்தேடலின்விரி உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) ஆற்றாத் தாயைத் தேற்றல் முதலாகப் புதல்வியைக் காணாது கவலை கூர்தல் ஈறாகச் சொல்லப்பட்ட ஒன்பதும் செவிலி பின்தேடிச் சேறற்குரியவாம் என்றவாறு. அவற்றுள், செவிலி ஆற்றாத் தாயைத் தேற்றற்குச் செய்யுள்: 1நன்றே யிதென்று முகமுக நோக்கி நகைநகையா மன்றே யலர்சொல்லு மாதர்முன் னேதஞ்சை வாணன்றொல்சீர் சென்றே பரந்த திசைகளெல் லாஞ்சென்று தேர்ந்தணங்கை யின்றே தருவனன் னேவருந் தாதிங் கிருந்தருளே." என வரும். ஆற்றிடை முக்கோற்பகவரை வினாதற்குச் செய்யுள்: 2ஒருவெண் குடையிரு நீழன்முக் கோல்கொண் டொழுக்கத்தினால் அருவெங் களரியைந் தாறுசெல் வீரரு ளீரெழுபார் மருவெண் டிசைபுகழ் வாணன்றென் மாறையென் வஞ்சியன்னாள் பொருவெஞ் சுடரிலை வேலொரு காளைபின் போயினளே." எனவும், 3"சேயின் வரூஉ மதவலி யாவுயர்ந் தோமை நீடிய கானிடை யத்த முன்னா ளும்பர்க் கழிந்த வென்மகள்
1. த. கோ. செ : 340. 2. த. கோ. செ : 341. 3. நற்றிணை, செ : 198.
|