1கண்பட நீராழ்ந் தன்றே தந்தை தன்னூ ரிடவயிற் றொழுவே னுண்பல் கோடேந் தல்கு லரும்பிய திதலை வாஅர்ந் திலங்குவா லெயிற்றுப் பொலிந்ததார்ச் சில்வளைப் பல்கூந் தலளே யவளே மையண லெருத்தின் முன்பிற் றடக்கை வல்வி லம்பி னெய்யா வண்மகிழ்த் தந்தை தன்னூ ரிதுவே யீன்றேன் யானே பொலிகநும் பெயரே." எனவும் வரும்.
மிக்கோர் ஏதுக்காட்டற்குச் செய்யுள் :- 2"இயங்கா வனமென் மகளொரு காளைபின் னேகினளென் றுயங்கா தொழியஃ துலகியல் பாலுல வும்புயறோய் வயங்கா டகமதில் சூழ்தஞ்சை வாணன் மணங்கமழ்தார்ப் புயங்காதல் கொண்டணைந் தாளய னார்தந்த பூமகளே." எனவும், 3"சீர்கெழு வெண்முத்த மணிபவர்க் கல்லதை நீருளே பிறப்பினு நீர்க்கவைதா மென்செய்யுந் தேருங்கா னும்மக ணுமக்குமாங் கனையளே." எனவும் வரும். செவிலி யெயிற்றியொடு புலம்பற்குச் செய்யுள்: 4"செருமக ளேயும் புயத்தய லான்பின் செலவிடுத்தென் னொருமக ளேயென் றுனையயிர்த் தேன்புனை யோவியம்போல் வருமக ளேதஞ்சை வாணனொன் னார்துன்னும் வன்சுரத்தோர் அருமக ளேயுரை யாயவள் போன வதரெனக்கே." எனவும், 5"முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின தலைமுடி சான்ற தண்டழை யுடையை யலமர லாயமொ டியாங்கணும் படாஅன் மூப்புடை முதுபதி தாக்கணங் குடைய காப்பும் பூண்டிசின் கடையும் போகலை பேதை யல்லை மேதையங் குறுமகள்
(பாடம்) 1. 'கண்டனிராயிற் றெழுவே னுண்பற்' 2. த. கோ. செ : 342. 3. கலி.பாலை, செ : 9. 4. த. கோ. செ : 343. 5. அகம். செ : 7.
|