232

பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென
வொண்சுடர் நல்லி லருங்கடி நீவித்
தன்சிதை வறித லஞ்சி யின்சிலை
யேறுடை யினத்த நாறுயிர் நவ்வி
வலைகாண் பிணையிற் போகி யீங்கோர்
தொலைவில் வெள்வேல் விடலையோ டென்மக
ளிச்சுரம் படர்தந் தோளே யாயிடை
யத்தக் கள்ள ராதொழு வறுத்தெனப்
பிற்படு பூசலின் வழிவழி யோடி
மெய்த்தலைப் படுதல் செய்யே னித்தலை
நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு
புலிப்பற் கோத்த புலம்புமணித் தாலி
யொலிக்குழைச் செயலை யுடைமா ணல்குல்
ஆய்சுளைப் பலவின் மேய்கலை யுதிர்த்த
துய்த்தலை வெண்காழ் பெறூஉங்
கற்கெழு சிறுகுடிக் கானவன் மகளே."

எனவும் வரும்.

செவிலி குரவொடு புலம்பற்குச் செய்யுள்:

1"இரவேய் குழலியிவ் வேதிலன் பின்செல்ல லென்றுசொல்லாக்
குரவே யறவுங் கொடியைகண் டாய்கொடிக் கோகனகந்
தரவே யெனவந்த சந்திர வாணன் றரியலர்போஞ்
சுரவே யழல்வழி யேதனிப் போயவென் றோகையையே."

எனவும்,

2"தான்றாயாக் கோங்கந் தளர்ந்து முலைகொடுப்ப
ஈன்றாய்நீ பாவை யிருங்குரவே - யீன்றாள்
மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்றாள் சென்ற
வழிகாட்டா யீதென்று வந்து."

எனவும் வரும்.

செவிலி சுவடுகண்டு இரங்கற்குச் செய்யுள்:

3"தொடுசிலைக் கானவ ரோடிய வேற்றுச் சுவடுவையே
யடுசிலைக் காளை யடியவை யேயறிந் தோரறிய
இடுசிலைப் பார்புரக் குந்தஞ்சை வாண னிசைக்குருகப்
படுசிலைப் பாவை பதமிவை யேவண்டு பாடுகவே."

என வரும்.


1. த. கோ. செ : 344.

2. திணைமாலை, நூற், செ : 65.

3. த. கோ. செ : 345.