233

செவிலி கலந்துடன் வருவோர்க் கண்டு கேட்டற்குச் செய்யுள்:

1"யானகம் போத வருந்தநும் போல்வனப் பெய்திவெய்ய
கானகம் போயினர் கண்டனி ரோகற்ப காடவிசூழ்
வானகம் போர்பயில் வானவற் கீந்தருள் வாணன்றஞ்சைத்
தேனகம் போருக மாதனை யாளுமொர் செல்வனுமே."

என வரும்.

கலந்துடன்வருவோர் புலம்பல் தேற்றற்குச் செய்யுள்:

2"யான்கண்ட வண்ணலு மெண்ணருங் காதலி னேகியவென்
மான்கண்ட னகண் மயில்கண்ட மாதரு மாதருமந்
தான்கண்ட தண்ணளிச் சந்திர வாணன் றரியலர்போங்
கான்கண்ட மெய்குளி ரப்பொய்கை சூழ்தஞ்சைகாண்பர்களே."

எனவும்,

3"நண்ணீநீர் சென்மி னமரவ ராபவேல்
எண்ணிய வெண்ண மெளிதரோ - எண்ணிய
வெஞ்சுட ரன்னானை யான்கண்டேன் கண்டாளாந்
தண்சுட ரன்னாளைத் தான்."

எனவும் வரும்.

செவிலி புதல்வியைக் காணாது கவலைகூர்தற்குச் செய்யுள்:

4"நாணினுந் தாரணி கற்புநன் றென்று நயந்துமுத்தம்
பூணினும் பாரமி தென்னுமென் பொன்னையிப் போதெனக்குச்
சேணினுஞ் சார்புகழ் வாணன்றென் மாறைமன் சேரலரைக்
காணினும் காணவந் தோவரி தாலிந்தக் கானிடையே."

எனவும்,

5"காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே
யகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றவிவ் வுலகத்துப் பிறரே."

எனவும் வரும்.

(18)

கற்பொடு புணர்ந்த கவ்வையின் விரி இவையெனல்

189. முற்பட மொழிந்த முறையெழு மூன்றுங்
கற்பொடு புணர்ந்த கௌவையின் விரியே.


1. த. கோ. செ : 346.

2. த. கோ. செ : 347.

3. திணைமாலை நூற். செ : 89.

4. த. கோ. செ : 348.

5. குறு. செ : 44.