1"ஏடார் மலர்க்குழல் வல்லியை யன்னையித் தீவினையே னாடா விடமில்லை ஞாலத் தகல்வயி னன்கமலக் காடார் பழனக் கழனிநன் னாடு கடந்துதன்னூர் வாடா வளமனை கொண்டுசென் றானொரு வள்ளலின்றே." எனவும், 2"தெறுவ தம்ம நும்மகள் விருப்பே யுறுதுய ரவலமொ டுயிர்செலச் சாஅய்ப் பாழ்படு நெஞ்சம் படரடக் கலங்க நாடிடை விலங்கிய வைப்பிற் காடிறந் தனணங் காத லோளே." எனவும் வரும். தலைவன் தம்மூர் சார்ந்தமை சாற்றற்குச் செய்யுள்: 3"நினையா னெதிர்ப்பட்ட நீடிருங் குன்றிது நீகுடைந்த சுனையா மதுமலர்ச் சோலைக ளாமுவை தூயவண்டன் மனையா மிவையினி வாணன்றென் மாறையை வாழ்த்தலர்போல் இனையா தெழுந்தருண் மானனை யாய்நம் மெழினகர்க்கே." எனவும், 4"முளிவயிர்ப் பிறந்த வளிவளர் கூரெரிச் சுடர்விடு நெடுங்கொடி விடர்முகை முழங்கும் இன்னா வருஞ்சுரந் தீர்ந்தன மென்மெல வேகுமதி வாழியோ குறுமகள் போதுகலந்து கறங்கிசை யருவி வீழும் பிறங்கிருஞ் சோலைநம் மலைகெழு நாட்டே." எனவும் வரும். தலைவி முன்செல்வோர் தம்மொடும் தன்வரல் பாங்கியர்க்கு உணர்த்திவிடுத்தற்குச் செய்யுள்: 5"புனையல ரேதிலர் காதலந் தாயர் பொறாமையிற்போ யினைதுயர் யாதொன்று மின்றிவெங் கானிகந் தியானுமம் பொன் வனைகழ லானும் வருவதெல் லாஞ்சென்று வாணன்றஞ்சை துனைவுட னேகுகின் றீர்சொல்லு வீரென் றுணைவியர்க்கே." எனவும்,
1. அம்பிகாபதிக்கோவை, செ :409. 2. ஐங்குறு, செ : 313. 3. த. கோ. செ : 350. 4. ஐங்குறு, செ : 3, 5. 5. த. கோ. செ : 351.
|