1"கவிழ்மயி ரெருத்திற் செந்நா யேற்றை குருளைப் பன்றி கொள்ளாது கழியுஞ் சுரநனி வாரா நின்றன ளென்பது முன்னுற விரைந்தனி ருரைமின் இன்னகை முறுவலென் னாயத் தோர்க்கே." எனவும் வரும். முன்சென்றோர் பாங்கியர்க்கு உணர்த்தற்குச் செய்யுள்: 2"போதலர்ந் தல்லை முனியுமெல் லோதிப் புனையிழைதன் காதலன் பின்வரக் கண்டனம் யாங்கண்டல் வேலிமுந்நீர் மாதலந் தன்னிரு தோள்வைத்த வாணன்றென் மாறைவண்ணச் சூதலந் தொல்கவிம் மித்திரள் மாமுலைத் தோகையரே." என வரும். பாங்கியர் கேட்டு நற்றாய்க்கு உணர்த்தற்குச் செய்யுள்: 3"வாளேய் விழிநின் மயிலனை யாடஞ்சை வாணன்வெற்பில் வேளே யனைய விடலைபின் னேசுர மீண்டினிநங் கேளேய் பதிவரு மென்னநல் லோர்சொல்லக் கேட்டனமிந் நாளே யனையநன் னாளுள வோசென்ற நாள்களிலே." எனவும், 4"மானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி தான்வரு மென்ப தடமென் றோளி 5யஞ்சின ளொதுங்கி யவனொடு பஞ்சின் மெல்லடி பரல்வடுக் கொளவே." எனவும் வரும். நற்றாய் தலைமகனுளங்கோள் வேலனை வினாதற்குச் செய்யுள்: 6"தென்மாறை நன்னகர் மன்னவன் வாணன் செழுந்தஞ்சைசூழ் பொன்மா திரத்துப் புலனுணர் வீர்சுரம் போய்வருவோன் என்மானை யென்மனை யிற்றரு மோதன்னை யீன்றநற்றாய் தன்மா நகருய்க்கு மோசொல்லு வீரொன்று தானெனக்கே." எனவும்,
1. ஐங்குறு, செ : 397. 2. த. கோ. செ : 352. 3. த. கோ. செ : 353. 4. தொல், பொருள், அகத்திணை, இ : 42-ஆம் சூ. உரைமேற்கோள். (பாடம்) 5. 'அஞ்சின ளஞ்சின ளொதுங்கிப் பஞ்சிமெல்லடி.' 6. த. கோ. செ : 354.
|