238

6. தன்மனை வரைதல்

தன்மனை வரைதலின் வகை

193. வினாதல் செப்பல் மேவலென் றிறைவன்
தனாதில் வரைதல் தான்மூ வகைத்தே.

(இ - ம்.) தலைமகன் மீண்டு வந்து தன் மனையின்கண்ணே வரைதல் உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) வினாதலும் செப்பலும் மேவுதலும் என மூன்று வகையினையுடைத்தாம், தலைமகன் மீண்டு வந்து தன் மனையின் கண்ணே வரைதல் என்றவாறு.

(23)

தன்மனை வரைதலின் விரி

194. பணிமொழி நற்றாய் மணனயர் வேட்கையிற்
செவிலியை வினாதலும் செவிலிக் கிகுளை
வரைந்தமை யுணர்த்தலும் வரைந்தமை செவிலி
நற்றாய்க் குணர்த்தலும் உற்றாங் கிருவருந்
தலைவியில் வந்துழித் தலைவன் பாங்கிக்
கியான்வரைந் தமைநுமர்க் கியம்புசென் றென்றலும்
தானது முன்னே சாற்றிய துரைத்தலும்
என்னுமிவ் வைந்து மின்னிலை வேலோன்
மன்னிய தன்மனை வரைதலின் விரியே.

(இ - ம்.) மீண்ட தலைமகன் தலைமகளைத் தன்மனையின் கண்ணே வரைந்து கோடலின்விரி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) பணிமொழிநற்றாய் மணனயர் வேட்கையிற் செவிலியை வினாதல் முதலாகப் பாங்கி தானது முன்னே சாற்றியதுரைத்தல் ஈறாகச் சொல்லப்பட்ட ஐந்தும் மீண்ட தலைமகன் தலைமகளைத் தன்மனையின் கண்ணே வரைந்து கோடலின் விரியாம் என்றவாறு.

அவற்றுள், பணிமொழி நற்றாய் மணனயர் வேட்கையிற் செவிலியை வினாதற்குச் செய்யுள்:

1"தாமாக மேவினு நம்மனைக் கேவந்து தண்சிலம்பார்
மாமா தினைமணஞ் செய்வதற் கேமரு வார்கமலப்


1. த. கோ. செ : 355.