பூமாது கேள்வன் புகழ்த்தஞ்சை வாணன் பொருப்பிலினி யாமா றுயிரனை யாய்சொல்வ மோவவ ரன்னையர்க்கே." எனவும், 1"நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினு மெம்மனை வதுவை நன்மணங் கழிகெனச் சொல்லி னெவனோ மற்றே வென்வேன் மையற விளங்கிய கழலடிப் பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே." எனவும் வரும். செவிலிக்கு இகுளை வரைந்தமை உணர்த்தற்குச் செய்யுள்: 2"என்னா மியம்புவ தியாய்க்கினி நாமன்னை யின்றுதம்மிற் கொன்னாரு நித்திலக் கோதைநம் மாதைக் கொடிநெடுந்தேர்க் கன்னாடர் மண்கொண்ட வாணன்றென் மாறையிற் காதலர்தாம் நன்னாள் மணம்புணர்ந் தாரென்று தூதர் நவின்றனரே." என வரும். வரைந்தமை செவிலி நற்றாய்க்கு உணர்த்தற்குச் செய்யுள்: 3"எனைக்கே ளிருநின் றியற்றவங் கேமண வின்பமெய்தி யனைக்கேண்மை நண்ணிய வண்ணல்பின் னாகநம் மன்னையின்றிம் மனைக்கே வருமென வந்துசொன் னார்தஞ்சை வாணன்வெற்பிற் சுனைக்கேழ் நனைக்கழு நீர்க்குழ லாய்சில தூதரின்னே. எனவும், 4"மள்ள ரன்ன மரவந் தழீஇ மகளி ரன்ன வாடுகொடி நுடங்கும் அரும்பதங் கொண்ட பெரும்பத வேனிற் காதல் புணர்ந்தன ளாகி யாய்கழல் வெஞ்சின விறல்வேற் காளையொ டின்றுபுகு தருமென வந்தன்று தூதே." எனவும் வரும். உற்றாங்கிருவருந் தலைவிஇல் வந்துழித் தலைவன் பாங்கிக்குயான் வரைந்தமை நுமர்க்கியம்பு சென்று என்றற்குச் செய்யுள்: 5"கோபுரஞ் சோலை கொடிமதின் மாடங் குலாவிமையோர் மாபுரம் போலுந்தென் மாறை வரோதயன் வாணன்வெற்பில்
1. ஐங்குறு. செ : 399. 2. த. கோ. செ : 356. 3. த. கோ. செ : 97. 4. ஐங்குறு. செ : 400. 5. த. கோ. செ : 358.
|