நீபுரந் தேதந்த மாதையங் கியாம் வரை நீர்மை 1பொன்செய் நூபுரஞ் சூழடி யாய் சென்று கூறு நுமர்தமக்கே." என வரும். பாங்கி தானது முன்னே சாற்றியதுரைத்தற்குச் செய்யுள்: 2"அன்னைக் கியம்பின னாண்டகை யான்முன் னறிந்துதென்னன் தன்னைப் பணிந்துகுற் றேவல்செய்யாது சமர்க்கெழுந்த மன்னைப் புறங்கண்ட வாணன்றென் மாறை வரையிலெங்கள் பொன்னைப் புணர்ந்துநுங் கேண்முன்னர் நீபொன் புனைந்ததுவே." எனவும், 3"கருவிரன் மந்திக் கல்லா வன்பார்ப் பிருவெதி ரீர்ங்கழை யேறிச் சிறுகோல் மதிபுடைப் பதுபோற் றோன்று நாட வரைந்தனை நீயெனக் கேட்டியா னுரைத்தனெ னல்லெனோ வஃதென் யாய்க்கே." எனவும் வரும். இவற்றுள் நற்றாய் மணனயர் வேட்கையிற் செவிலியை வினாதலாகிய ஒன்றும் வினாதற்குரித்து; செவிலிக்கு இகுளை வரைந்தமை யுணர்த்தலும், வரைந்தமை செவிலி நற்றாய்க்கு உணர்த்தலும், பாங்கி தானது முன்னே சாற்றியதுரைத்தலுமாகிய மூன்றும் செப்பற்குரிய; தலைமகன் யான் வரைந்தமை நுமர்க்கியம்பு சென்று என்றலாகிய ஒன்றும் மேவுதற்குரித்து. (24) உடன்போய் வரைந்து மீளுதலின் விரி 195. ஆதி யொன்றொழித் தல்லன நான்கும் மாதினை யுடன்போய் வரைந்து மீடற்கு நீதியி னுரிய நினையுங் காலை. (இ - ம்.) தலைமகன் புணர்ந்துடன்போய்த் தலைமகளைத் தன்னூரின் கண்ணே வரைந்துகோடல் உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) நற்றாய் மணனயர்வேட்கை யொழித்து அல்லாத நான்கும் தலைமகன் புணர்ந்துடன்போய்த் தலைமகளைத் தன்னூரின்கண் வரைந்துமீடற்கு உரியவாம் ஆராயுங்காலத்து என்றவாறு. (25) (பாடம்) 1. 'சொன்ன,' 2. த. கோ. செ : 359. 3. ஐங்குறு. செ : 280.
|