ஒருவகை மீண்டுவரைதலின் விரி 196. இருவரில் லிற்கும் 1இயைந்தபன் னொன்றும் ஒருவகை மீண்டு வரைதலின் விரியே. (இ - ம்.) ஒருவகை மீண்டுவரைதலின் விரி உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.)2தலைமகன் தம்மூர் சார்ந்தமை யுணர்த்தல் முதலாகப் பாங்கி தானது முன்னே சாற்றியது உரைத்தல் ஈறாகச் சொல்லப்பட்டன அவள்மனை வரைதற்கும் தன்மனை வரைதற்கும் உரிய கிளவி பதினொன்றும் உடன்போய் மீண்டு வரைந்து கோடலின் விரியாம் ஒருபடியாக என்றவாறு. ஒரு படியென்றது மேற்சூத்திரங்களுட் கவற்சி நீக்குதற்கு எனக்கொள்க. (26) 7. உடன்போக்கிடையீடு உடன்போக்கிடையீட்டின் வகை 197. போக்கறி வுறுத்தல் வரவறி வுறுத்தல் நீக்கம் இரக்கமொடு மீட்சி யென்றாங்கு உடன்போக் கிடையீ டொருநால் வகைத்தே. (இ - ம்.) உடன்போக்கிடையீட்டின் வகை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.)போக்கறிவுறுத்தல் முதலாக இரக்கமொடு மீட்சி ஈறாக நான்குவகையினையுடைத்தாம் உடன்போக்கிடையீடு என்றவாறு. (27) உடன்போக்கிடையீட்டின் விரி 198. நீங்குங் கிழத்தி பாங்கியர் தமக்குத் தன்செல வுணர்த்தி விடுத்தலும் தலைமகள்
1. அ. கு. அவர்களும், த. க. அவர்களும் எழுதிய புத்துரையில் 'இயைந்தொரு பத்தும்' என்று பாடங்கூறி, விசேட உரையில் 'அவை மீட்சிவிரியிலே தலைவன் தன்னூர் சார்ந்தமை சாற்றல் முதலியவை ஐந்தும், தன்மனை வரைதலின் விரி ஐந்தும் என்க.' என்றதை ஈண்டு நோக்குக. 2. இவை மீட்சியின் விரிதலும், தன்மனை வரைதலின் விரியிலும் உள்ளவை. இவற்றை மேற்காட்டிய புத்துரையோடு நோக்கி ஆய்ந்து கொள்க.
|