தன்செல வீன்றாட் குணர்த்திவிடுத்தலும் ஈன்றாட் கந்தணர் மொழிதலும் ஈன்றாள் அறத்தொடு நிற்றலிற் றமர்பின் சேறலைத் தலைவி கண்டு தலைவற் குணர்த்தலும் தலைமக டன்னைத் தலைமகன் விடுத்தலும் தமருடன் செல்பவள் அவன்புற நோக்கிக் 1கவன்றாற் றலுமென நுவன்றவை ஆறும் உடன்போக் கிடையீட்டு விரியா கும்மே. (இ - ம்.) உடன்போக்கிடையீட்டுவிரி உணர்த்துதல்நுதலிற்று. (இ - ள்.) நீங்குங்கிழத்தி பாங்கியர் தமக்குத் தன்செலவுணர்த்தி விடுத்தல் முதலாகத் தமருடன் செல்பவள் அவன்புறநோக்கிக் கவன்றாற்றல் ஈறாகச் சொல்லப்பட்ட ஆறும் உடன்போக்கிடையீட்டு விரியாம் என்றவாறு. அவற்றுள், நீங்குங்கிழத்தி பாங்கியர் தமக்குத் தன்செலவுணர்த்தி விடுத்தற்குச் செய்யுள்: 2"வளவேய் மிடைந்த வழிபடர் வீர்செங்கை வாணன்றஞ்சைத் தளவேய் நகையென் றுணைவியர் பாற்சென்று சாற்றுமின்போர்க் களவே ளனையவோர் காளைபின் போயினள் கான்பனிநீத் திளவேனில் வல்லிபெற் றாங்கெவ்வ நீத்தெழி லெய்தியென்றே" எனவும் 3"சேட்புல முன்னிய வசைநடை யந்தணிர் நும்மொன் றிரந்தனென் மொழிவ லெம்மூர் யாய்நயந் தெடுத்த வாய்நலங் கவின வாரிடை யிறந்தன ளென்மின் நேரிறை முன்கையென் னாயத் தோர்க்கே." எனவும் வரும். தலைமகள் தன்செலவு ஈன்றாட்கு உணர்த்திவிடுத்தற்குச் செய்யுள்: 4"வாயார நுங்களை வாழ்த்துகின் றேன்தஞ்சை வாணன்வெற்பிற் சாயாத மாதவத் தாழ்சடை யீரன்பர் தம்மொடின்றியான்
1. (பாடம்) 'கவன்றரற்றல்.' 2. த. கோ. செ : 360. 3. ஐங்குறு. செ : 384. 4. த. கோ. செ : 361.
|