243

சேயாறு தேர்மிசைச் செல்வதெல் லாமெங்கள் சேரியிற்சென்
றியாயா கியகொடி யாட்கினி தாக வியம்புமினே."

எனவும்,

1"கடுங்கட் காளையொடு நெடுந்தே ரேறிக்
கோள்வல் வேங்கை மலைபிறக் கொழிய
வேறுபல் லருஞ்சுர மிறந்தன ளவளெனக்
கூறுமின் வாழியோ வாறுசென் மாக்கள்
நற்றோ ணயந்துபா ராட்டி
யெற்கெடுத் திருந்த வறனில் யாய்க்கே."

எனவும் வரும்.

நற்றாய்க்கு அந்தணர் மொழிதற்குச் செய்யுள்:

3"மருள்கொண்ட சிந்தை மலைகிழ வோய்தஞ்சை

வாணன்வெற்பில

வெருள்கொண்ட மென்பிணை வென்றகண் ணாள்வென்றி

வேல்வலங்கை

யருள்கொண்ட நெஞ்சினோ ரண்ணல்பின் னேயகன்

றாளகல்வர்

னிருள்கொண்ட கொண்டல்செல் லாவரை சூழு

மிருஞ்சுரத்தே."

எனவும்,

3"புன்கண் யானையொடு புலிவழங் கத்த
நயந்த காதலற் புணர்ந்துசென் றனளே
நெடுஞ்சுவர் நல்லின் மருண்ட
இடும்பை யுறுவிநின் கடுஞ்சூன் மகளே."

எனவும் வரும்.

நற்றா யறத்தொடு நிற்றலின் தமர்பின் சேறலைத் தலைவி கண்டு தலைவற்குணர்த்தற்குச் செய்யுள்:

4"உவலைப் பதுக்கை முரம்புசெல் லாம லுலகமங்கை
தவலைத் தவிர்த்த தமிழ்த்தஞ்சை வாணன் றரியலர்போங்
கவலைக் கடத்துச் சிலைத்திரை கோலிக் கடும்பகழித்
துவலைப் படைக்கட றோன்றல்பொற் றேர்வங்கஞ் சூழ்கின்றதே."

என வரும்.


1. ஐங்குறு. செ : 385.

2. த. கோ. செ : 362.

3. ஐங்குறு. செ : 386.

4. த. கோ. செ : 363.