8. வரைதல் அந்தணர் சான்றோர் முன்னிட்டு அருங்கலங் கொடுத்து வரைதல் 199. தன்னூர் வரைதலும் தன்மனை வரைதலும் என்னுமிவ் விரண்டொழித் தெவற்றினுங் கிழவோன் அந்தணர் சான்றோர் முன்னிட் டருங்கலம் தந்து வரைதல் தகுதி யென்ப. (இ - ம்.) வரைதலுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) உடன்போய்த் தன்னூரின்கண்ணே வரைதலும் மீண்டு வந்து தன்மனைக்கண்ணே வரைதலுமாகிய இரண்டும் ஒழித்து அல்லாத எல்லா வரைவின் கண்ணும் தலைமகன் அந்தணரையும் சான்றோரையும் முன்னிட்டு அருங்கலங் கொடுத்து வரைதல் உலகத்தியற்கை எனச் சொல்லுவர் புலவர் என்றவாறு . அவற்றுள் , அவ்வாறு வரைந்து கொண்டுழிக் கண்டோர் மகிழ்ந்து கூறியதற்குச் செய்யுள் : 1"சேலார் புனல்வையை சூழ்தஞ்சை வாணன்றென் மாறையினம் வேலா னெனப்பிறர் வேட்டவா யார்மணம் வெண்டுகிலின் பாலா ரமளியும் பாற்கட லானது பங்கயக்கண் மாலா யினனிவ னுந்திரு வாயினள் மாதுமின்றே" எனவும், 2"கயற்க ணாளையுங் காமனன் னானையும் இயற்றி னார்மண மேத்தருந் தன்மையார் மயற்கை யில்லவர் மன்றலின் மன்னிய இயற்கை யன்புடை யாரியைந் தார்களே" எனவும் வரும். மூன்றாவது வரைவியல் முற்றிற்று. 1. த. கோ. செ : 366. 2. சீவக. பதுமையா. செ : 182
|