247

(இ - ம்.) இல்வாழ்க்கையின் வகை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) கிழவோன் மகிழ்ச்சி முதலாகச் செவிலி மகிழ்ச்சி ஈறாகச் சொல்லப்பட்ட நான்குவகையினையுடைத்தாம், இல்வாழ்க்கை என்றவாறு.

(3)

இல்வாழ்க்கையின் விரி

203. தலைவன் றலைவிமுன் பாங்கியைப் புகழ்தலும்
தலைவனைப் பாங்கி வாழ்த்தலும் தலைவியை
வரையுநா ளளவும் வருந்தா திருந்தமை
உரையா யென்றலும் பெருமக ளுரைத்தலும்
தலைவனைப் பாங்கி வரையுநா ளளவும்
நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதலும்
மன்றல் மனைவரு செவிலிக் கிகுளை
அன்புற வுணர்த்தலும் வாழ்க்கைநன் றறைதலும்
மணமனைச் சென்று வந்த செவிலி
பொற்றொடி கற்பியல் நற்றாய்க் குணர்த்தலும்
நன்மனை வாழ்க்கைத் தன்மை யுணர்த்தலும்
அன்னவர் காதல் அறிவித் தலுமெனும்
இன்னவை பத்தும்இல் வாழ்க்கை விரியே.

(இ - ம்.) இல்வாழ்க்கையின்விரி உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தல் முதலாக அன்னவர் காதல் அறிவித்தல் ஈறாகச் சொல்லப்பட்ட பத்தும் இல்வாழ்க்கை விரியாம் என்றவாறு.

அவற்றுள், தலைவன் தலைவிமுன் பாங்கியைப் புகழ்தற்குச் செய்யுள்:

1"நின்மே லடுத்த பசலையின் காரண நின்றுணைவி
யென்மே லடுத்த வியல்பினன் றோபெற்ற தேழுலகுந்
தன்மே லடுத்த புகழ்த்தஞ்சை வாணன் றமிழ்க்கிரிநுண்
பொன்மே லடுத்தன போற்சுணங் கீன்ற புணர்முலையே."

எனவும்,


1. த. கோ. செ : 367.