1"அதிரிசை யருவிய 2பெருவரைத் தொடுத்த பஃறே னிறாஅ லல்குநர்க் குதவும் நுந்தைநன் னாட்டு வெந்திறன் முருகென நின்னோய்க் கியற்றிய வெறிநின் றோழி யென்வயி னோக்கலிற் போலும் பன்னாள் வருந்திய வருத்தந் தீரநின் திருந்திழைப் பணைத்தோள் புணரவந் ததுவே."
எனவும் வரும். தலைவனைப் பாங்கி வாழ்த்தற்குச் செய்யுள்: 3"தெரியா டகவிதழ்ப் பூங்கொன்றை வேணியுந் தேவியும்போற் பிரியா துறையப் பெறுகுதி ராற்பிறை மானுநெற்றிப் புரியாழ் நிகர்மொழிப் பூவையு நீயும் புணர்ந்தபல்கேழ் வரியார் சிலையண்ண லேதஞ்சை வாணன்றென் மாறையிலே." எனவும், 4"எக்கர் ஞாழற் பூவி னன்ன சுணங்கு வள ரிளமுலை மடந்தைக் கணங்குவளர்த் தகறல் வல்லா தீமே." எனவும் வரும். பாங்கி, தலைவியை வரையு நாளளவும் வருந்தாதிருந்தமை வினாதற்குச் செய்யுள்: 5"கோங்கநன் மாமுகைக் கொங்கைநல் லாய்மணங் கூடுமெல்லை யாங்கன மாற்றி யிருந்தனை நீயிப மாசயிலந் தாங்கன மாறத் தலம்புனை வாணன் றமிழ்த்தஞ்சைவாழ் பூங்கன மார்குழ லாரலர் மாலைப் பொறைசுமந்தே." என வரும். தலைமகள் வருந்தாதிருந்ததற்குக் காரணங்கூறற்குச் செய்யுள்: 6"மைதொய்ந் தலர்ந்த மலர்த்தடஞ் சூழ்தஞ்சை வாணனொன்னார் மெய்தோய்ந்த செந்நிற வேல்விழி யாய்துயர் வெள்ளம்வெற்பர் கைதோய்ந் தளிப்ப வசோகத்த வாய்நிறங் கால்வனவாய் நெய்தோய்ந் தனதழை யேபுணை யாக்கொண்டு நீந்தினனே." எனவும்,
1. தொல், பொருள், கற்பியல், 5 ஆம் சூ. உரைமேற்கோள். 2. (பாடம்) 'அருவரைத் தொடுத்த.' 3. த. கோ. செ : 368. 4. ஐங்குறு. செ : 149. 5. த. கோ. செ : 369. 6. த. கோ. செ : 370.
|