1"மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன விட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை தட்டைப் பறையிற் கறங்கு நாடன் றொல்லைத் திங்க ணெடுவெண் ணிலவின் மணந்தனன் மன்னனெந் தோளே யின்று முல்லை முகைநா றும்மே." எனவும் வரும். பாங்கி தலைவனை வரையுநாளளவும் நிலைபெற ஆற்றிய நிலைமை வினாதற்குச் செய்யுள்: 2"அயிரை பரந்த வந்தண் பழனத் தேந்தெழின் மலர தூம்புடைத் திரள்கால் ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்கிவள் இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர் தொழுதுகாண் பிறையிற் றோன்றி யாநுமக் கரிய மாகிய காலைப் பெரிய நோன்றனிர் நோகோ யானே." என வரும். மன்றல்மனை வருசெவிலிக்கு இகுளை அன்புறவுணர்த்தற்குச் செய்யுள் : 3"வளங்கொண்ட தஞ்சை வரோதயன் வாணன்றென் | மாறையன்னாள் | இளங்கொங்கை கொண்டுழு தீரங்கொள் மார்பின்முத் | தேற்பவித்தி | விளங்கொண் பிறைநுதல் வேர்தரும் போகம் | விளைத்தன்புசேர் | உளங்கொண் டருத்துத லாலன்னை யூர | னுவப்புறுமே" | என வரும். பாங்கி இல்வாழ்க்கை நன்றென்று செவிலிக்குணர்த்தற்குச் செய்யுள் : 4"சினவேய் சுளியுங் களிற்றண்ணல் வாணன்றென் மாறையினம் மனவே யகலல்குல் வல்லியன் னாள்மறை யோர்முதலாம் சனவே தனைகெடத் தானங்க ளீதலிற் சாலவுநன் றெனவே நடக்கின்ற தாலன்னை நாடொறு மில்லறமே." என வரும்.
1. குறுந். செ : 193. 2. குறு. செ : 178. 3. த. கோ. செ : 372. 4. த. கோ. செ : 373.
|