மணமனைச் சென்றுவந்த செவிலி, தலைமகள் கற்புநற்றாய்க்கு உணர்த்தற்குச் செய்யுள் : 1"ஒன்றோ நமக்குவந் தெய்திய நன்மை யுடன்றெதிர்ந்தார் வன்றோ லமர்வென்ற வாட்படை வாணன்றென்மாறையில் வாழ் நின்றோகை கற்பி னிலைமையெண் ணாதெதிர் நின்றுவெந்நிட் டன்றோ வடக்கிருந் தாள்மடப் பாவை யருந்ததியே." என வரும். செவிலி நற்றாய்க்குத் தலைமகள் நன்மனை வாழ்க்கைத் தன்மை உணர்த்தற்குச் செய்யுள் : 2"விண்மே லமரர் விரும்பம ராவதி வெள்ளமுந்நீர் மண்மே லடைந்தன்ன வாழ்க்கைய தானது வாணன்றஞ்சைப் பண்மே லளிமுரல் குங்குமத் தோளவர் பங்கயம்போல் கண்மே லருள்பெற்று வாழ்மட மாதர் கடிமனையே." எனவும், 3"முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக் குவளை யுண்கண் குய்ப்புகை கமழத் தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர் இனிதெனக் கணவ னுண்டலி னுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே." எனவும் வரும். செவிலி நற்றாய்க்கு இருவர் காதலும் அறிவித்தற்குச் செய்யுள் : 4"நனையகத் தல்கிய நாண்மல ரோதி நயந்துறையும் மனையகத் தல்லிடை வைகுத லாற்றஞ்சை வாணனொன்னார் வினையகத் தல்குதல் செல்லுவ ரேனுமவ் வேந்தர்பொற்றேர் முனையகத் தல்கல்செல் லாதொரு நாளு முகிழ்நகையே." எனவும், 5"கானங் கோழிக் கவர்குரற் சேவல் ஒண்பொறி யெருத்திற் றண்சித ருறைப்பப் புதனீர் வாரும் பூநாறு புறவிற் சீறூ ரோளே மடந்தை வேறூர்.
1. த. கோ. செ : 374. 2. த. கோ. செ : 375. 3. குறு. செ : 167. 4. த. கோ. செ : 376. 5. குறு. செ : 242.
|