ஈங்கிது என்னெனப் பாங்கி வினாதற்குச் செய்யுள் : 1"எம்மா திரமும் புரவலர்த் தேடி யிரந்துழல்வோர் தம்மா துயரந் தணித்தருள் வாணன் றமிழ்த்தஞ்சைவாழ் நம்மாவி யன்னவர் நாடொறு நாடொறு நல்கவுநீ விம்மா வருந்துவ தென்பிரிந் தாரின் விளங்கிழையே." என வரும். இறைமகன் புறத்தொழுக்கு இறைமகள் உணர்த்தற்குச் செய்யுள் : 2"தாராக நல்கினர் காரிகை யாய்தஞ்சை வாணன்றன்னைச் சேரா தவரென்னத் தீவினை யேனையச் செங்கண்வன்கட் காரா கழனிக் கரும்பினஞ் சாயக் கதழ்ந்துசெந்நெல் ஆரா தயலிற்பஞ் சாயாரு மூர ரயலவர்க்கே." எனவும், 3"என்கேட்டி யேழா யிருநிலத்தும் வானத்தும் முன்கேட்டுங் கண்டு முடிவறியேன் - பின்கேட் டணியிகவா நிற்க வவனணங்கு மாதர் பணியிகவான் சாலப் பணிந்து." எனவும் வரும். தலைவியைப் பாங்கி கழறற்குச் செய்யுள் : 4"புனையலங் காரநங் கற்பியல் போற்றியும் போற்றருஞ்சீர் மனையறம் பாலித்தும் வாழ்வதல் லாற்றஞ்சை வாணனன்னா டனையவண் டார்குழ லாரணங் கேநமக் கன்பரிந்நாள் இனையரென் றார்வமில் லாவுரை யாட லியல்பல்லவே." எனவும், 5"இதுமற் றெவனோ தோழி துனியிடை யின்ன ரென்னு மின்னாக் கிளவி இருமருப் பெருமை யீன்றணிக் காரான் உழவன் யாத்த குழவியி னகலாது பாஅற் பைம்பயி ராரு மூரன்
1. த. கோ. செ : 379. 2. த. கோ. செ : 330. 3. திணைமாலை நூற். 135. 4. த. கோ. செ : 381. 5. குறு. செ : 181.
|