திருமனைப் பலகடம் பூண்ட பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே." எனவும் வரும். தலைவி செவ்வணியணிந்து சேடியை விடுப்புழி அவ்வணி உழையர் கண்டு அழுங்கிக்கூறற்குச் செய்யுள் : 1"வேளாண் மரபு விளக்கிய வாணன்மின் னார்கழல்சூழ் தாளான் வளங்கெழு தஞ்சையன் னீர்சங்கந் தந்தநன்னீர்த் தோளா மணியன்ன தொல்குல வோடையிற் றோன்றியபூ வாளா வலர்தொடுப் பார்க்கெங்ங னேவந்து வாய்த்ததுவே." எனவும், 2"அரத்த முடீஇ யணிபழுப்பப் பூசிச் சிரத்தையாற் செங்கழுநீர் - பரத்தை நினைநோக்கிக் கூறினு நீமொழிய லென்று மனைநோக்கி மாண விடும்." எனவும் வரும். பரத்தையர் கண்டு பழித்தற்குச் செய்யுள்: 3"படியொன்று சாலியனையவர் சேரிப் படர்பவளக் கொடியொன்று நீல மலர்ந்தது காட்டக் கொடிய வெம்போர் வடியொன்று கூரிலை வேல்வல்ல வாணன்றென் மாறையிற்பொற் றொடியொன்று தோள்மட வார்சேரி வாய்வந்து தோன்றியதே." என வரும். பரத்தை யுலகியல் நோக்கி விடுத்தலிற் றலைவன் வரவு கண்டு உவந்து வாயில்கள் மொழிதற்குச் செய்யுள் : 4"வாருந்து பச்சிள நீர்முலை யார்மதன் வாணன்றஞ்சை யாருந் தொழத்தகு மெம்பெரு மாட்டிதன் னேவலினாற் சேரும் பரத்தையர் சேரியி லேசென்ற சேடியைக்கண் டூருந் திரைப்புன லூரன்வந் தானின் றுலகியற்கே." என வரும். தலைமகன் வரவு பாங்கி அரிவைக்குணர்த்தற்குச் செய்யுள் : 5"தள்ளா வளவயல் சூழ்தஞ்சை வாணன் றரியலர்போல் உள்ளா துனைப்பண் டகன்றன ராயினு முள்ளியிப்போ
1. த. கோ. செ : 382. 2. திணைமாலை நூற். செ : 144. 3. த. கோ. செ: 383. 4. த. கோ. செ : 384. 5. த. கோ. செ : 385.
|