266

3. ஓதற் பிரிவு

அவற்றுள், கல்விக்குப் பிரிவு தலைமகனான் உணர்ந்த தோழி தலைமகட்கு உணர்த்தற்குச் செய்யுள்:

1"மல்வித் தகங்கொண்ட தோளுடை யான்றஞ்சை வாணன்றொல்சீர்
நல்வித் தகன்புவி நாவில்வைத் தோன்வையை நாடனையாய்
கல்வித் தடங்கட னீந்திய காதலர் கற்றவர்முன்
சொல்வித்த வென்றழ லார்சுரம் போகத் துணிந்தனரே."

என வரும்.

தலைமகன் கல்விக்குப் பிரிந்துழித் தலைமகள் கார்ப்பருவங் கண்டு புலம்பற்குச் செய்யுள்:

2"யாணர்க் குழன்மொழி யென்செய்கு வேன்கல்வி யெல்லையெல்லாங்
காணப் பிரிந்தவர் காண்கில ராற்கடன் மேய்ந்துதஞ்சை
வாணற் கெதிர்ந்தவர் மங்கையர் போலுமென் வல்லுயிரின்
ஊணற்ப மென்னவெண் ணாவரு மேக முருமுடனே."

என வரும்.

ஓதற்குப் பிரிந்துழிக் கார்ப்பருவங் கண்டு வருந்திய தலைமகளைத் தோழி யாற்றுவித்தற்குச் செய்யுள் :

3"காதற் கயம்படிந் துன்னொடு காமக் கனிநுகரா
தோதற் ககன்ற வுணர்வுடை யோருடை நீருலகம்
மாதர்க் கமைந்தருள் வாணன்றென் மாறை வரக்கடவர்
ஆதற் கணங்கனை யாய்புய லேது அறிந்தருளே."

எனவும் வரும். பிறவுமன்ன.

4. காவற் பிரிவு

காவற் பிரிவு தலைமகனான் உணர்ந்த தோழி தலைமகட்கு உணர்த்தற்குச் செய்யுள்:

4"விண்காவல் கொண்ட திலோத்தமை தான்முதன் மெல்லியலார்
கண்காவல் கொண்டருள் காரிகை காவலர் கார்க்கடல்சூழ்
மண்காவல் கொண்ட மனத்தின ராயினர் வாணன்றஞ்சைப்
பண்காவல் கொண்ட மொழிச் செய்ய வாயிதழ்ப் பைங்கிளியே."

என வரும்.



1. த. கோ. செ : 408.

2. த. கோ. செ : 409.

3. த. கோ. செ : 410.

4. த. கோ. செ : 411.