தலைமகன் காவற்குப் பிரிந்துழித் தலைமகள் கூதிர்ப்பருவங் கண்டு வருந்தியதற்குச் செய்யுள்: 1"மன்னுயிர் காவலன் வாணன்றென் மாறையில் வந்தளியார் என்னுயிர் காவல ரேந்திழை யாயித யம்புலர்த்திக் கொன்னுயிர் வாடை கொடும்பனி நீரிற் குளிர்குழைத்துப் பின்னுயி ராமலென் மேற்பூசு நாளுமென் பேசுவதே." என வரும். காவற்குப் பிரிந்துழிக் கூதிர்ப்பருவங் கண்டு வருந்திய தலைமகளைத் தோழி யாற்றுவித்தற்குச் செய்யுள் : 2"வரற்கால மென்றென் றெனப்பல கூடல் வளைத்துதிரம் விரற்கால வின்று மெலியன்மின் னேசென்று மேதினிகாத் துரற்கால குஞ்சர மஞ்சமஞ் சூர்ந்துறை வீசுகின்ற சரற்காலம் வந்தடைந் தார்தஞ்சை வாணன் றமிழ்வெற்பரே." என வரும்.
5. தூதிற் பிரிவு தூதிற்குப் பிரிவு தலைமகனான் உணர்ந்த தோழி தலைமகட்கு உணர்த்தற்குச் செய்யுள்: 3"தூதாக வன்பர் செலத்துணிந் தாரென்றுஞ் சொற்புலவோர் மாதாக வன்பசி தீர்த்தருள் வாணன்றென் மாறையிந்து மீதாக வம்பு கிடந்தன போலுண்கண் மெல்லியலிப் போதாக வம்புகல் வோரிக லார்தம் புரம்புகவே." என வரும். தலைமகன் தூதிற்குப் பிரிந்துழித் தலைமகள் முன்பனிப் பருவங் கண்டு வருந்தியதற்குச் செய்யுள் : 4"மலிகின்ற வண்புகழ் வாணன்றென் மாறையை வாழ்த்தலர்போன் மெலிகின்ற சிந்தையு மேனியுங் கொண்டு விளர்ப்பெனும்பேர் பொலிகின்ற கஞ்சுகம் போர்த்திருந் தேனைப் புரந்தருளார் நலிகின்ற முன்பனி நாளினண் ணார்முனை நண்ணினரே." என வரும்.
1. த. கோ. செ : 412.
2. த. கோ. செ : 413. 3. த. கோ. செ : 414. 4. த. கோ. செ : 415.
|