268

தூதிற்குப் பிரிந்துழி முன்பனிப்பருவங் கண்டு வருந்திய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தற்குச் செய்யுள் :

1"சுற்றுங் சூழல்நின் பிணிவிடுப் பான்வந்து தோன்றினர்பார்
முற்றும் பொழிகின்ற முன்பனி நாள்முகி லுங்கடலும்
வற்றும் பருவத்து மண்புரப் பான்தஞ்சை வாணனொன்னார்ச்
செற்றும் படையின்வெம் போர்தணிப் பானன்று சென்றவரே."

எனவும் வரும். பிறவுமன்ன.

6. துணைவயிற் பிரிவு

வேந்தர்க்குற்றுழி உதவியிற்பிரிவு தலைமகனான் உணர்ந்த தோழி தலைமகட்கு உணர்த்தற்குச் செய்யுள்:

2"நண்பான மன்னர்க் கிடர்தணிப் பானெண்ணி நல்லுதவிப்
பண்பான மன்னர் படர்தலுற் றார்பணி நீர்பொழியுந்
தண்பா னலந்தொடை யம்புய வாணன் றமிழ்த்தஞ்சைவாழ்
வெண்பா னலங்கொள்செவ் வாயன்ன மேயன்ன மென்னடையே."

என வரும்.

தலைமகன் வேந்தர்க்குற்றுழி உதவியிற்பிரிந்துழித் தலைமகள் பின்பனிப் பருவங்கண்டு வருந்தியதற்குச் செய்யுள் :

3"இன்னற் படுகின்ற வென்னையெண் ணார்தமக் கின்றுணையாம்
மன்னர்க் குதவிப் பிரிந்தநங் காதலர் வாணன்றஞ்சைக்
கன்னற் கடிகை யறிவதல் லாற்பகல் காண்பரிதாம்
பின்னற் கனையிருள் கூர்துன்ப மேவிய பின்பனியே."

என வரும்.

வேந்தர்க்குற்றுழி உதவியிற்பிரிந்துழிப் பின்பனிப் பருவங்கண்டு வருந்திய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தற்குச் செய்யுள்:

4"வடுக்கண் டனையகண் மங்கைநல்லாய்தஞ்சை வாணன்வெற்பின்
அடுக்கங் குளிர வசைகின்ற வாடை யகன்றவர்க்கு
நடுக்கஞ்செய் பின்பனி நாளின்வந் தாரமர் நண்பனுற்ற
இடுக்கண் களையவென் றேயகன் கான மிகந்தவரே."

என வரும்.



1. த. கோ. செ : 416.

2. த. கோ. செ : 417.

3. த. கோ. செ : 418.

4. த. கோ. செ : 419.