269

7. பொருள்வயிற் பிரிவு

பொருள்வயிற்பிரிவு தலைமகனால் உணர்ந்த தோழி தலைமகட்கு உணர்த்தியதற்குச் செய்யுள்:

1"மஞ்சைப் புனைமதின் மாறை வரோதயன் வாணர்பிரான்
தஞ்சைப் பதியண்ண லெண்ணலர் போற்றனி நாமிருக்க
நெஞ்சைப் பொருள் வயின் வைத்துநங் கேள்வர்நன் னீண்மதியின்
பிஞ்சைப் புரைநுத லாய்பிரி வானின்று பேசினரே."

என வரும்.

தலைமகன் பொருள்வயிற் பிரிந்துழித் தலைமகள் இளவேனிற் பருவங்கண்டு வருந்தியதற்குச் செய்யுள்:

2"நங்க ணிரங்க வரும்பொருள் தேட நடந்தவன்பர்
செங்க ணிருங்குயி லார்ப்பது கேட்கிலர் செந்தமிழோர்
தங்க ணிடும்பை தவிர்த்தருள் வாணன்றென் றஞ்சைவஞ்சி
திங்க ணிவந்தது போற்கவி னார்முகத் தேமொழியே."

என வரும்.

பொருள்வயிற் பிரிந்துழி இளவேனிற் பருவங்கண்டு வருந்திய தலைமகளைத் தோழி ஆற்றுவித்தற்குச் செய்யுள் :

3"வார்த்தன பார மடமயி லேகுயின் மாருதமாந்
தேர்த்தனி வீரன் திருநாளும் வந்தது சேர்மின்சென்றார்
தார்த்தட மேரு வெனும்புய வாணன்றஞ் சாபுரிநின்
றார்த்தது கேட்டுவந் தார்பொருள் தேட வகன்றவரே."

என வரும். பிறவுமன்ன.

சில பிரிவுகளின் பொதுக் கிளவிகள்

கல்வியிற்பிரிவு முதலாகிய ஐந்தினுள்ளும் தூதும் உதவியும் காரணமாகிய பிரிவின்கண் அவ்வினை ஓர்யாண்டின் முடியாது நீட்டித்து முடிந்துழித் 4தலைமகளுருவு வெளிப்பாடு கண்டு 5சொல்லியதற்குச் செய்யுள்:

6"மைக்குஞ் சரநிரை யாற்றஞ்சை வாணன் மருவலரைக்
கைக்குங் களங்கெழு பாசறை யூடு கயலும்வில்லும்



1. த. கோ. செ : 420.

2. த. கோ. செ : 421.

3. த. கோ. செ : 422.

4. தலைமகளது உருபு.

5. தலைமகன்் சொல்லியதற்கு.

6. த. கோ. செ : 423.