271

5. ஒழிபியல்

ஒழி்பாவது இன்னதென்பது

210. ஒழிபெனப் படுவ தகப்பாட் டுறுப்பும்
வழுவும் அமைவும் தழுவிய தாகும்.

இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின், முன்னர் வந்த இயல்நான்கினுள்ளும் கூறிக் கூறாத ஒழிபிலக்கணம் உணர்த்தினமையான், ஒழிபியல் என்னும் பெயர்த்து.

(இ - ம்.) ஒழிபாவது இதுவென்பது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஒழிபென்று சொல்லப்படுவது அகப்பாட்டிற்குரிய உறுப்புக்களையும், அகப்பாட்டிலக்கணத்தினைத் தப்பியதனையும், அமைந்த நீதியினையும் பொருந்தியதாம் என்றவாறு.

(1)

அகப்பாட்டுறுப்புக்கள்

211. திணையே கைகோள் கூற்றே கேட்போர்
இடனே காலம் பயனே முன்னம்
மெய்ப்பா டெச்சம் பொருள்வகை துறையென்று
அப்பால் ஆறிரண் டகப்பாட் டுறுப்பே.

(இ - ம்.) அகப்பாட்டுறுப்பின் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) அகப்பாட்டுறுப்பாவன திணை முதலாகத் துறை ஈறாகப் பன்னிரு பகுதிப்பட்டனவாம் என்றவாறு.

(2)

1. 2. திணையும், கைகோளும்

212. அவற்றுள்,
முன்னவை இரண்டுஞ் சொன்னவை யாகும்.

(இ - ம்.) நிறுத்தமுறையானே திணையும் கைகோளும் இவையென்பது உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) அப்பன்னிரண்டனுள்ளும் முற்பட்ட திணையும் கைகோளுமாகிய இரண்டும் மேல் அகத்திணை இயலிற் சொல்லப் பட்டனவாம் என்றவாறு.

(3)