273

(இ - ள்.) பயந்தோன் முதலாகச் சொல்லப்பட்டவர் முகத்துச் சொல் நிகழா அகப்பொருளகத்து என்றவாறு.

எனவே அவை பிறரால் எடுத்துப் பிறரால் ஓர் சொற்றந்து அடுத்துக் கூறப்படும் எனக்கொள்க.

இதற்குச் செய்யுள்:

". . . . . . .எந்தையு நிலனுறப் பொறா அன்
சீறடி சிவப்ப வேயவல் குலவி
. . . . . . . . . . . . . . . . .
வெவனில குறுமக ளியங்குதி யென்னும்."

இத்தன்மையன தந்தை கூறினானாகத் தோழி எடுத்துக் கூறுதலாம். பிறவுமன்ன,

(6)

தலைவன் கூற்றிற்கு ஒரு சிறப்புவிதி

216. தமர்வரின் இடைச்சுரந் தன்னிற் கிழத்தியோ
டமர்தரு கிழவோன் 1ஆணையுங் கூறும்.

(இ - ம்.) தலைவன் கூற்றுள் வரைவியலின் ஒழிபு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) புணர்ந்துடன் போகின்ற காலத்துத் தலைமகள் தமர் பிற்செல்லின் தலைமகன் தலைமகளொடு ஆணையுங் கூறுவன் என்றவாறு.

உதாரணம் :

"கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்
நீவிளை யாடுக சிறிதே."

என்பதாம்.

(7)

தலைவி கூற்றிற்கு ஒரு சிறப்பு விதி

217. உடன்போய் மீண்ட கொடுங்குழை மடந்தை
பிரிவுழித் தலைவனொடு சுரத்தியல் பேசலும்
பிரிந்துழி நெஞ்சொடும் பிறரொடும் வருந்திச்
சொல்லலும் உரியள் சொல்லுங் காலை.

(இ - ம்.) தலைவி கூற்றுள் வரைவியலின் ஒழிபு உணர்த்துதல் நுதலிற்று.


1. ஆணை - நீதிநூல் விதி.

  அ. வி - 18