ஈண்டு விதந்து சொல்லப்படாதாரின் கூற்று நிகழும் திறம் 222. 1சாற்றா எழுவருந் தலைவன் தலைவியோ டேற்றன கூறுப இடந்தொறும் இடந்தொறும். (இ - ம்.) மேற்சொல்லப்படாதவர் கூற்றுக்கு எய்தியதன் மேற் சிறப்புவிதி உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்சொல்லப்படாத பார்ப்பானும், பாங்கனும் பாணனும், கூத்தரும், விறலியரும், பரத்தையரும், அறிவரும் என்கின்ற எழுவரும் தலைமகனோடும் தலைமகளோடும் இடந்தொறும் இடந்தொறும் பொருந்தியவற்றைக் கூறுவர் என்றவாறு. (13) தலைவி கூற்றிற்குப் புறனடை 223. நெஞ்சு நாணு நிறைசேர் அறிவும் செஞ்சுடர்ப் பருதியும் திங்களும் மாலையும்
1. இந்நூலின் 213, 214 ஆம் சூத்திரங்களில் கூற்றிற்குரியார் எனக் கூறப்பட்ட பதின்மூவர் கூற்றுக்களுள், 216 முதல் 221-ஆம்சூத்திரம் வரையிலும் உள்ள ஆறு சூத்திரங்களில் தலைவன், தலைவி, நற்றாய், செவிலி, கண்டோர் என்னும் இவ்வைவர் கூற்றிற்கே சிறப்புவிதி கூறப்பட்டன. மற்றை எண்மர் கூற்றிற்குச் சிறப்பு விதி கூறப்பட்டில. அங்ஙனமாகவும், இச்சூத்திரத்தில் 'சாற்றா எழுவரும்' என்று பாடங்கொண்டு, அதற்கு மேற்சொல்லப்படாத பார்ப்பானும், பாங்கனும், பாணனும், கூத்தரும், விறலியும், பரத்தையரும், அறிவரும் என்று உரை கூறப்பட்டிருக்கின்றது. இதிற் பாங்கியின் கூற்று விடப்பட்டிருக்கின்றது. அ. கு. அவர்களும் த. க. அவர்களும் தாங்கள் எழுதிய புத்துரையில், 'சாற்றா அனைவரும்' என்று பாடங்கொண்டு, அதற்குப் பார்ப்பான், பாகன், பாங்கி, பாணன், கூத்தர், விறலி, பரத்தை, அறிவர் என்னும் எண்மரும் என்று பொருள் கூறினார்கள். இவர்கள் களவிற் கூற்றிற்குரியாரைக் கூறும் 'தலைவன் தலைவி' என்று தொடங்குஞ் சூத்திரத்தில் 'பாங்கன்' என்பதற்குப் பதிலாகப் 'பாகன்' என்று பாடங்கொண்டார்கள் . இப் பழைய உரையின் பிரதிகளுள் ஒன்றினும் 'பாகன்' என்று பாடங் காணப்படுகின்றது. ஆயினும், அதில் 'சாற்றா எழுவரும்' என்னும் இச்சூத்திரத்தின் உரையில் 'பாகன்' என்பது காணப்படாமல் பாங்கன் என்னும் சொல்லே காணப்படுகின்றது. இவற்றை ஆராய்ந்து கொள்க.
|