277

புள்ளும் மாவும் புணரியும் கானலும்
உள்ளுறுத் தியன்றவும் ஒழிந்தவை பிறவும்
தன்சொற் கேட்குந போலவும் தனக்கவை
இன்சொற் சொல்லுந போலவும் ஏவல்
செய்குந போலவும் தேற்றுந போலவும்
மொய்குழற் கிழத்தி மொழிந்தாங் கமையும்.

(இ - ம்.) தலைவி கூற்றுக்கு எய்துவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) நெஞ்சு முதலாகக் கானல் ஈறாகச் சொல்லப்பட்டனவும் அவையல்லாத பிறவும் தன்சொற் கேட்கின்றன போலவும், தனக்கவை இன்சொற் சொல்லுகின்றனபோலவும், ஏவல் செய்குந போலவும், தன்னைத் தேற்றுகின்றன போலவும் சொல்லிய மாத்திரத்தானே ஆற்றுந் தலைமகள்என்றவாறு.

பிறவும் என்றதனாற் கழியும், நெய்தலும், மரமுதலாயினவும் கொள்க. உதாரணம் மேற்காட்டியவற்றுள்ளும் பிறவற்றுள்ளும் கண்டுகொள்க.

(14)

எல்லார் கூற்றிற்கும் புறனடை

224. இறையோன் முதலோர் யாரொடு மின்றித்
தம்மோடு தாமே சாற்றியும் அமைப.

(இ - ம்.) எல்லார் கூற்றுக்கும் எய்துவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) மேற்சொல்லப்பட்ட தலைவன் முதலாகிய பதின்மூவரும் யாரோடுங் கூறாது தம்மொடு தாமே கூறியும் அமைவர் என்றவாறு.

உதாரணம் மேற்காட்டியவற்றுள்ளும் பிறவற்றுள்ளும் கண்டுகொள்க. இத்துணையுங் கூறப்பட்டது கூற்றியல் எனக்கொள்க.

(15)

4. கேட்போர்

கிழவன் கூற்றும் கிழத்தி கூற்றும் கேட்போர்

225. கிழவோன் கூற்றும் கிழத்தி கூற்றும்
பழமறை யோன்முதற் பதின்மருங் கேட்ப.