12. துறை துறை இன்னது என்பது 234. சொல்லிய அல்ல ஒன்றினும் அவற்றோ டொல்லும் வகைதேர்ந் துணர்த்தியல் வழாமல் உரைப்போர் கேட்போர் உண்மை யின்றி உரைக்கும் கவியே உரைப்பது துறையே. (இ - ம்.) நிறுத்தமுறையானே துறை என்னும் உறுப்பு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்சொல்லப்பட்ட மக்களும் மாவும் முதலாயினவன்றிப் பிற ஒன்றின ஆயினும் அவற்றை முன் சொல்லியவற்றோடும் பொருந்தும் வண்ணம் ஆராய்ந்து இலக்கணம் வழுவாதபடியாகத் தன்னையன்றி உரைப்போரும் கேட்போரும் உண்டாகல் இன்றிக் கவிசொல்லும் புலவன் தானே கூறுவது துறை என்னும் உறுப்பாம் என்றவாறு. 1"உழையும்வெங் காளமும் போலுங்கண் ணாளொரு காலமுள்ளங் குழையுமெம் பாலென்று கொண்டநெஞ் சேகலிக்கோடைமண்மேன் மழையுமந் தாரமும் வந்தன வாணன்றென் மாறையின்மாந் தழையுநம் போலிங்ங னேகவின் வாடத் தவஞ்செய்ததே." என்னும் பாட்டிற்குத் திணை - குறிஞ்சி; கைகோள்- களவு; கூற்று - தலைமகன் கூற்று; கேட்போர் - நெஞ்சு; இடம் - தனியிடம்; முன்னிலையுமாம். காலம் - இறந்தகாலம்; பயன் - குறைநேர்தல்; முன்னம் - இவ்விடத்து எனக்கிது தகும் என்பது; மெய்ப்பாடு - மருட்கை; எச்சம் - இனி யென்செய்வே மென்னுஞ் சொல்; பொருள்வகை - சொற்றொறும் சொற்றொறும் பொருளற்று வந்தமையாற், புனல்யாற்றுப் பொருள்கோளாம். 2"ஏமா னெனவஞ்சு மெற்காத் தலினவ் விரவிபொற்றேர் வாமானின் வாழ்வன வாகபன் னாட்டஞ்சை வாணனொன்னார் போமா னதரிடத் தென்னையர் தோன்றப் புறங்கொடுத்த கோமான் மணிநெடுந் தேர்நுகம் பூண்ட குரகதமே." என்னும் இப்பாட்டிற்குத் திணை - பாலை ; கைகோள் - கற்பு ; கூற்று - தலைமகள் கூற்று ; கேட்போர் - இல்லை ; இடம் - சுரத்திடம் ; காலம் - இறந்தகாலம் ;பயன் - ஆற்றுவது ; முன்னம் - இக்காலத்
1. த. கோ. செ : 99. 2. த. கோ. செ : 365.
|