திற்கு இது தகுவது என்பது; மெய்ப்பாடு உவகை; எச்சம் நின்றானாயின் என்பட்டொழியும் என்னுங்குறிப்பு. பொருள் வகை - குரகதம். எற்காத்தலின் வாழ்வனவாக என இறுதியும் முதலும் பொருள்பட நிற்றலின் பூட்டுவிற் பொருள்கோள். 1"காதற் கயம்படிந் துன்னொடு காமக் கனிநுகரா தோதற் குகன்ற வுணர்வுடை யோருடை நீருலகம் மாதர்க் கமைந்தருள் வாணன்றென் மாறை வரக்கடவர் ஆதற் கணங்கனை யாய்புய லேது வறிந்தருளே." என்னும் பாட்டிற்குத் திணை -முல்லை; கைகோள் - கற்பு; கூற்று - தோழிகூற்று; கேட்போர் - தலைமகள்; இடம் - மனையிடம்; காலம் -எதிர்காலம்; பயன் - ஆற்றுவது; முன்னம் - இவ்விடத்து இவட்கிது தகுவது என்பது; மெய்ப்பாடு -உவகை; எச்சம் - நீ வருந்தல் வேண்டாவென்னுஞ் சொல். பொருள் கோள்வகை - சொற்றொறுஞ் சொற்றொறும் பொருளற்று வந்தமையாற், புனல்யாற்றுப் பொருள்கோள். 2"போயே தெருவிற் றனிவிளை யாடும் புதல்வற்புல்ல நீயே திலையல்லை நின்மக னேயிவ னீயுமவன் தாயே வருகெனச் சேயன்ன வாணன் றமிழ்த்தஞ்சைமான் ஏயே யெனநிற்ற லானறிந் தேன்தன்னை யெங்கையென்றே." என்னும் பாட்டிற்குத் திணை - மருதம் ; கைகோள் - கற்பு; கூற்று - தலைமகள் கூற்று; கேட்போர் - தலைமகன்; இடம் - பள்ளியிடம்; காலம் - இறந்தகாலம்; பயன் - பரத்தையிற் பிரிவொழித்தல்; முன்னம் - இவ்விடத்து இவற்கிது தகுவது என்பது; மெய்ப்பாடு - அச்சம்; எச்சம் - நீ மறைத்தல் வேண்டா என்னுஞ் சொல்; பொருள் வகை - புனல்யாற்றுப் பொருள்கோள். 3"வெடிக்கின்ற விப்பியு ணித்திலம் பைத்தலை வெம்பகுவாய்த் துடிக்கின்ற திங்களிற் றோன்றுந் துறைவசெஞ் சொற்புலவோர் வடிக்கின்ற முத்தமிழ் வாணன்றென் மாறையெம் மான்மருங்கை யொடிக்கின்ற கொங்கைகண் டாலெவர் நெஞ்சுரு காதவரே." என்னும் பாட்டிற்குத் திணை - நெய்தல்; கைகோள் - களவு; கூற்று - தோழிகூற்று; கேட்போர் - தலைமகன்; இடம் - தனியிடம்; காலம் - எதிர்காலம்; பயன்-வரவு; முன்னம் - இவ் விடத்து இவர்க்கிது தகுவது என்பது; மெய்ப்பாடு - அச்சம்; எச்சம் - வரைதல் வேண்டும் என்னுஞ் சொல்; பொருள்வகை - புனல்யாற்றுப் பொருள்கோள், பிறவுமன்ன. (25)
1. த. கோ. செ : 410. 2. த. கோ. செ : 400. 3. த. கோ. செ : 232.
|