நெய்தற்கலியுட் கண்டுகொள்க. விடைதழாற்கு உதாரணம் முல்லைக்கலியுட் கண்டுகொள்க. சுரநடை முதலான நான்கற்கும் உதாரணம் புறப்பொருள் வெண்பாமாலையுட் கண்டுகொள்க. (35)
அகப்பாட்டினுள் பாடப்படுவோர் 245. பாட்டுடைத் தலைவன் கிளவித் தலைவனெனப் பாட்டினுட் பாடப் படுவோர் இருவர். (இ - ம்.) அகப்பாட்டினுட் பாடப்படுவோர் இவரென்பது உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) அகப்பாட்டினுட் பாடப்படுவோர் பாட்டுடைத் தலைமகனும் கிளவித் தலைமகனும் என இருவர் என்றவாறு. (36) அகப்பாட்டின்கண் பாடப்படுவோருள் உயர்ந்தோன் 246. அவருள், உயர்ந்தோன் பாட்டுடைத் தலைவ னாகும். (இ - ம்.) மேற்சொல்லப்பட்டவருள் உயர்ந்தோனை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) மேற்சொல்லப்பட்ட இருவருள்ளும் உயர்ந்தோன் பாட்டுடைத் தலைவனாம் என்றவாறு. 1"அரிபெய் சிலம்பி னாம்பலந் தொடலை" என்னும் நெடுந்தொகைப் பாட்டினுள், "மழைவளந் தரூஉ மாவண் டித்தன் பிண்ட நெல்லி னுறந்தை யாங்கட் கழைநிலை பெறாஅக் காவிரி நீத்தம் குழைமா ணொள்ளிழை நீவெய் யோளொடு வேழ வெண்புணை தழீஇப் பூழியர் கயநா டியானையின் முகனமர்ந் தாஅங்கு ஏந்தெழி லாகத்துப் பூந்தார் குழைய நெருந லாடினை புனலே." என்னு மதனானும், 2"வேளாப் பார்ப்பான்" என்னும் நெடுந்தொகைப் பாட்டினுட்,
1. அகம். செ : 6. 2. அகம். செ : 24.
|