குடவர் கோமான் குணவீற் றுமுனைத் தருந்தே ரோன்பொன் றனிபொழி தடக்கைத் தொண்டிக் கோமான் விண்டவர்த் தேய்க்குங் கேளோம்பு நெடுந்தகை பறையிற் சாஅய் நன்னல மிழந்த தீவினை யேனொடு பண்டை போலா தின்றுபிறி தாகிக் கடுங்கதிர் கரந்த தண்பனி நெடும்புலம் படர்ந்த தண்டுறைக் குருகே." என்னும் பாட்டினுட் பாட்டுடைத் தலைமகனே வந்தவாறு கண்டுகொள்க. 1"கொண்டுழிப் பண்டம் விலையொரீஇக் கொற்சேரி நுண்டுளைத் துன்னூசி விற்பாரின் --ஒன்றானும் வேறல்லை பாண வியலூரன் வாய்மொழியைத் தேற எமக்குரைப்பாய் நீ." என்னும் பாட்டினுட் கிளவித் தலைமகன் வந்தவாறு கண்டுகொள்க. 2"தேரோன் மலைமறைந்த செக்கர்கொள் புன்மாலை ஆரான்பி னாய னுவந்தூதுஞ்--சீர்சால் சிறுகுழ லோசை செறிதொடி! வேல்கொண் டெறிவது போலு மெனக்கு." என்னும் பாட்டினுள் இருவரும் வாராதொழிந்தவாறு கண்டுகொள்க. பிறவுமன்ன. (40) அகப்புறப் பாட்டிற்காகும் ஒரு விதி 250. அகப்புறப் பாட்டும் இகப்பில அவையே. (இ - ம்.) அகப்புறப்பாட்டுக் காவதொரு விதி உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) அகப்பாட்டிற் சொன்ன இலக்கணங்களைக் கடவாது அகப்புறப் பாட்டும் என்றவாறு. உதாரணம் வெண்பாமாலையுள்ளும், பிறவற்றுள்ளுங் கண்டு கொள்க. இத்துணையும் கூறப்பட்டனவெல்லாம் அகப்பாட்டிற்கும் அகப்புறப்பாட்டிற்கும் உரிய உறுப்புக்களாம். (41)
1. ஐந்திணை ஐம்பது, செ : 21. இதில் ஊரன் என்பது கிளவித் தலைவன் பெயர். 2. ஐந்திணை ஐம்பது, செ : 7.
|