"உரைத்திசிற் றோழியது புரைத்தோ வன்றே யெருத்தங் கமழு மீன்றோள் துறைப்ப வென்றி யிரீஇயரென் னுயிரே." என்னுஞ் சிற்றட்டகத்துக் குறிஞ்சிப்பாட்டினுள் ஊடல் என்னும் உரிப்பொருள் கண்டுகொள்க. 1"சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக் கொலைவி லெயினர் தங்கைநின் முலைய சுணங்கென நினைதி நீயே அணங்கென நினையுமென் அணங்குறு நெஞ்சே." என்னும் ஐங்குறு நூற்றுப் பாலைப்பாட்டினுட் புணர்தல் என்னும் உரிப்பொருள் வந்தது. "நாளு நாளு மாள்வினை யழுங்க இல்லிருந்து மகிழ்வோற் கில்லையாற் புகழென ஒண்பொருட் ககல்வர்நங் காதலர் கண்பனி துடையினித் தோழி நீயே." என்பது இருத்தலென்னும் உரிப்பொருள், சிற்றுட்டகத்துப் பாலைப்பாட்டினுள் வந்தது. 2"வளமலர் ததைந்த வண்படு நறும்பொழின் முளைநிரை முறுவ லொருத்தியொடு நெருகற் குறிநீ செய்தனை யென்ப வலரே குரவ நீள்சினை யறையும் பருவ மாக்குயிற் கோவையிற் பெரிதே." என்பது ஊடலென்னும் உரிப்பொருள் வந்த ஐங்குறுநூற்றுப் பாலைப்பாட்டு. 3"வெறுக்கைக்குச் சென்றார் விளங்கிழாய் தோன்றார் பொறுக்கவென் றாற்பொறுக்க லாமோ - வெறுப்பபோற் பொன்னு ளுறுபவளம் போன்ற புணர்முருக்கம் என்னு ளுறுநோய் பெரிது." இஃது இரங்கல் என்னும் உரிப்பொருள் வந்த ஐந்திணைப் பாலைப்பாட்டு. 4"இகல்வேந்தன் சேனை யிறுத்தவாய் போல." என்பது புணர்தல் எனும் உரிப்பொருள் வந்த கலித்தொகை முல்லைப்பாட்டு. 1. ஐங்குறு. செ: 363. 2. ஐங்குறு. செ: 369. 3. திணைமாலை நூற். செ: 67. 4. கலி - முல்லைக்கலி, செ: 8.
|