293

1"புறவணி நாடன் காதன் மடமகள்
ஒண்ணுதல் பசப்ப நீசெலிற் றெண்ணீர்ப்
போதவிழ் தாமரை யன்னநின்
காதலம் புதல்வ னழுமினி முலைக்கே."

என்பது பிரிதல் என்னும் உரிப்பொருள் வந்த ஐங்குறுநூற்று முல்லைப்பாட்டு.

2"உதுக்கா ணதுவே யிதுவென் மொழிகோ
நோன்சினை யிருந்த விருந்தோட்டுப் புள்ளினந்
தாம்புணர்ந் தமையிற் பிரிந்தோ ருள்ளா
தீங்குர லகவக் கேட்டு நீங்கிய
ஏதி லாளர் இவண்வரிற் போதிற்
பொம்ம லோதியும் புனையல்
எம்முந் தொடாஅ லென்குவெ மன்னே."

என்பது ஊடல் என்னும் உரிப்பொருள் வந்த முல்லைப்பாட்டு.

3"என்னரே யேற்ற துணைபிரிந்தா ராற்றென்பார்
அன்னரே யாவ ரவரவர்க்கு --முன்னரே
வந்தாரந் தேங்கா வருமுல்லை சேர்தீந்தேன்
கந்தாரம் பாடுங் களித்து."

இஃது இரங்கல் என்னும் உரிப்பொருள் வந்த திணைமாலை முல்லைப்பாட்டு.

4"பழனக் கம்புள் பயிர்ப்பெடை யகவுங்
கழனி யூரநின் மொழிவ லென்றுந்
துஞ்சுமனை நெடுநகர் வருதி
யஞ்சா யோவிவ டந்தைகை வேலே."

என்பது புணர்தல் என்னும் உரிப்பொருள் வந்த ஐங்குறுநூற்று மருதப்பாட்டு.

5"அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா
எவ்வ நஞ்சத் தெஃகெறிந் தாங்குப்
பிரிவில் புலம்பி நுவலுங் குயிலினுந்
தேறுநீர் கெழீஇய யாறுநனி கொடிதே
அதனினுங் கொடியா டானே மதனின்
றுய்த்தலை யிதழ் பைங்குருக் கத்தியொடு


1. ஐங்குறுந். செ : 424.

2. குறுந். செ : 191.

3. திணைமாலை நூற். செ : 106.

4. ஐங்குறு. செ : 60.

5. நற்றிணை, செ : 97.