294


பித்திகை விரவுமலர் கொள்ளீ ரோவென
வண்டுசூழ் வட்டிய டிரிதரு
தண்டலை யுழவர் தனிமட மகளே."

என்பது இருத்தல் என்னும் உரிப்பொருள் வந்த நற்றிணை மருதப்பாட்டு. இரங்கற்கும் இதுவேஉதாரணம்.

"சுறவுப்பிற ழிருங்கழி நீந்தி யல்கலும்
இரவுக்குறிக் கொண்கன் வந்தனன்
விரவுமணிக் கொடும்பூண் விளங்கிழை யோயே."

என்பது புணர்தல் என்னும் உரிப்பொருள் வந்த சிற்றட்டகத்து நெய்தற்பாட்டு.

1"கணங்கொ ளருவிக் கான்கெழு நாடன்
குறும்பொறை நாட னல்வய லூரன்
தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற்
கடும்பகல் வருதி கையறு மாலை
கொடுங்கழி நெய்தலுங் கூம்பக்
காலை வரினுங் களைஞரோ விலரே."

என்பது இருத்தல் என்னும் உரிப்பொருள் வந்த ஐங்குறுநூற்று நெய்தற்பாட்டு.

2"கண்டிகு மல்லமோ கொண்கநின் கேளே
யொள்ளிழை யுயர்மணல் வீழ்ந்தென
வெள்ளாங் குருகை வினவு வோளே."

என்பது ஊடல் என்னும் உரிப்பொருள் வந்த ஐங்குறுநூற்று நெய்தற்பாட்டு.

பிறவும் இவ்வாறு இவற்றின் நீங்கி மயங்கி வருவன எல்லாம் கண்டுகொள்க. இத்துணையும் கூறியது வழுவமைதியாம்.

(42)

அதிகாரத்தின் புறனடை

252. கூறிய வல்ல வேறுபிற தோன்றினும்
கூறிய வற்றொடும் 3கூட்டி மெய்கொளக்
கூறி உணர்த்தல் குணத்தோர்க் கியல்பே.


1. ஐங்குறு. செ : 183.

2. ஐங்குறு. செ : 122.

3. (பாடம்) 'கூட்டிக்குறிக்கொள.'