(இ - ம்.) அதிகாரத்திற்கு ஆவதொரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) தீதில் பொருள் வேறே தோன்றினவாயினும் அவற்றை இதனுள் எடுத்தோதப்பட்ட பொருள்களோடு கூட்டி உண்மை புலப்படச் சொல்லிப் பிறர்க்கு உணர்த்துதல் குணமுடையோர்க்கு இலக்கணம் என்றவாறு. (43)
ஐந்தாவது ஒழிபியல் முற்றிற்று. "அகத்திணை நூற்றுப் பதினே ழடங்கா மிகுத்தகள வைம்பதுடன் மேனான்--கிகுத்த வரைவிருபத் தொன்பஃது மன்னுங்கற் பீரைந் துரையொழிபு நாற்பஃதோ டொன்று" "போக்கெல்லாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி ஆக்கஞ்சேர் ஊடல் அணிமருதம் - நோக்குங்கால் இல்லிருத்தல் முல்லை இரங்கல் நறுநெய்தல் சொல்விரிந்த நூலின் தொகை."
|