298

7. தாபத நிலையாவது, தலைமகனை இழந்த தலைமகள் தவ மேற்கொண்ட நிலையாகும்.

8. தபுதாரநிலையாவது, மனைவியை இழந்தபின் கொழுநன் தனிமையின் இருக்கின்ற நிலையாம்.

இவற்றுள், மடலேறுதலும் விடைதழாஅலும் நீங்கிய மற்றவற்றை அடியில் வரும் சூத்திரத்தானும் அறிக.

1. .... . . . . . . . . . . . . . . . . . . . . .'வாய்ந்த
சுரநடை மாதர் வருத்தம்; சுரனுள்

2. முதுபாலை தன்னை மொழியின் மதுமலர்த்தார்க்
காவலன் வீயக் கவன்றது வாகும் ;
. . . . .. . . . . . . . . . . . . . . . . . . . . . .

3. குற்றிசை கோல்வளை யாளைத் தலைமகன்

4. முற்றத் துறந்த துறவாம் ;குறுங்கலி
முற்றத் துறந்த தலைமகனை முன்னின்று
பொற்றொடி மாதர் பழிதூற்றாம், குற்றந்தீர்

5. தாபதம் காதற் றலைமகனை நீங்கிய
மேவரு மாதர் நிலையாகும் ; மேவருஞ்சீர்
நீக்கப் பட்டாளை உவந்த தலைமகன்

6. பார்த்துறூஉம் தன்மை அதுவாம் தபுதாரம்.

(வீரசோழியம், பக்கம் 107, 108. பவாநந்தர் கழகப் புதுப்பதிப்பு.)

இந்நூலுக்கு அ. கு. அவர்களும், த. க. அவர்களும் எழுதிய புத்துரையில் 243 ஆம் சூத்திரத்திற்கு அவர்கள் எழுதிய விசேட உரையையும் ஈண்டு நோக்குக.