303

2. வன்புறை - பாங்கி தலைவியை இடித்துரைத்தல்.(128ஆம் சூத்திரத்திற் கூறியவன்புறை, களவியலின் கிளவித் தொகைகள் பதினேழனுள் ஒன்றாம் எனவும், ஈண்டுக் கூறிய வன்புறை, ஒருசார் பகற்குறியின் வகைகள் மூன்றனுள் ஒன்றாம் எனவும் அறிக.)

3. இற்செறிப்பு உணர்த்தல் - தலைவியைப் புறத்திற் போகாதபடி இல்லின்கண் செறித்தமையைப் பாங்கி தலைவனுக்கு உணர்த்துதல்.

பகற்குறி இடையீட்டின் வகை - 3.

சூ. 155.

1. விலக்கல் - தலைவனும் தலைவியும் குறியின்கண் வருதலைப் பாங்கி விலக்கல்.

2. சேறல் - தோழி, தலைமகளை ஆடும் இடத்தினின்று அழைத்துச் செல்லுதல்.

3. கலக்கம் - தலைவனை அடையப் பெறாமையின் தலைவி மனங் கலங்குதலும், தலைவியை அடையப் பெறாமையின் தலைவன் மனங் கலங்குதலுமாம்.

இரவுக்குறி இடையீட்டின் வகை- 2.

சூ. 157.

1. வேண்டல் - இறையோன் பகற்குறி வேண்டலும், தோழி இறைவியை வேண்டலுமாம்.

2. மறுத்தல் - தோழியும், தலைவியும் தலைவன் வேண்டுகோளை மறுத்தல்.

3. உடன்படல் - தோழி இறையோன் வேண்டுகோட்குடன் படுதலும், தலைவி தோழியின் சொற்கு உடன்படுதலுமாம்.

4. கூட்டல் - பாங்கி தலைவியை அழைத்துச் சென்று குறியிடத் துய்த்தல்.

5. கூடல் - இறைவன் இறைவியைக் கூடுதல்.

6. பாராட்டல் - தலைவன் தலைவியைப் புகழ்தலும், பாங்கி இறைவன் அளித்த கையுறையைப் புகழ்தலுமா.

7. பாங்கிற் கூட்டல் - தலைவன் தலைவியை இல்வயிற் செல்ல விடுப்பப் பாங்கி தலைவியை இற்கொண்டு செல்லுதல்.

8. உயங்கல் - இரவுக்குறிக்கண் இறைவன் வரும் ஆற்றினது அருமையை எண்ணி இறைவி வருந்துதலும், அதனால், தலைவன் மயங்கி வருந்துதலுமாம்.

9. நீங்கல் - தோழி தலைவியைக் குறிக்கண் உய்த்து நீங்கலும் தலைவன் தலைவியைக் கூடி நீங்கலுமாம்.

இரவுக்குறி இடையீட்டின் வகை- 2.

சூ. 159.

1. அல்லகுறி - தலைவனும் தலைவியும் தோழியும் தங்களுக்குள் குறித்துக் கொண்டபடி தலைவனால் நிகழ்த்தப்படுதற்குரிய