சூ. 199. 3. வரைதல் ஐம்பத்தாறாம் நாள் - தலைவன் தலைவியின் இல்லத்திற்கு மீண்டு வருகையில் தலைவியின் தமர் எதிர்கொண்டு போய் அழைத்து வந்தபின் தலைவன் அருங்கல முதலியன கொடுத்து உலக இயற்கையின்படி அந்தணரையும் சான்றோரையும் முன்னிட்டு மணத்திற்குரிய சடங்குடன் வதுவை முடித்துக் கொள்ளுதல். வகை தன்மனை வரைதலின் வகை - 3. சூ. 193. 1. வினாதல் - தலைவியின் நற்றாய் 'நம்மனையின்கண் நம்புதல்விக்கு வதுவை நடத்தும்படி தலைமகன் நற்றாயைக் கேட்போமா' என்று செவிலியை வினாதல். 2. செப்பல் - இகுளை செவிலிக்கு வரைந்தமை சொல்லுதலும், அதனைச் செவிலி நற்றாய்க்குக் கூறுதலும், தலைமகன் 'யான் வரைந்தமையை நுமர்க்கு இயம்புக' எனத் தோழிக்குக் கூற அவள் 'யான் முன்னரே அதனை எம்மவர்க்கு இயம்பினேன்' என்றலுமாம். 3. மேவல் - தலைமகன் 'யான் வரைந்தமையை நுமர்க்குரை' என்று கூறுதல். உடன்போக்கிடை யீட்டின் வகை- 4. சூ. 197. 1. போக்கறிவுறுத்தல் - ஐம்பத்தாறாம் நாள் - தன்னூரை விட்டு நீங்கும் தலைவி எதிர்வந்தவர்களைத் தலைமகனுடன் தான் செல்லுதலைத் தோழியர்க்கும் நற்றாய்க்கும், உணர்த்த அனுப்புதலும், அந்தணர்கள் தலைவியின் செலவை நற்றாய்க்குக் கூறுதலுமாம். 2. வரவு அறிவுறுத்தல் - தமர்பின் வருதலைத் தலைமகள் கண்டு தலைவனுக்கு உணர்த்தல். 3. நீக்கம் - தலைமகன் தலைமகளின் தமர் பின் வருதலை உணர்ந்து தலைமகளை விடுத்துச் செல்லுதல். 4. இரக்கமொடு மீட்சி - தலைவன் நீங்கினமையின் தலைவி வருத்தத்துடன் தமர்பின் தன் இல்லத்திற்கு மீண்டு வருதல். கற்பியல் கிளவித் தொகை- 7. சூ. 201. 1. இல்வாழ்க்கை - தலைவனும் தலைவியும் இல்லின்கண் வாழும் வாழ்க்கையின் மேன்மையைக் கூறுதல். 2. பரத்தையிற் பிரிவு - தலைமகன் பரத்தையின்மேற்
|