காதல் கொண்டு தலைவியைப் பிரிந்து பரத்தையர் தஞ் சேரிக்குச் செல்லுதல். 3. ஓதற் பிரிவு - தலைவன் கல்வியின் காரணமாகப் பிரியும் பிரிவு. 4. காவற் பிரிவு - தலைவன் நாடு காத்தற்பொருட்டுப் பிரியும் பிரிவு. 5. தூதிற் பிரிவு - அரசர் இருவர் தம்மிற் பொராநின்ற வழி அவரைச்சந்து செய்விப்பதற்குத் தலைவன் பிரியும் பிரிவு. 6. துணைவயிற் பிரிவு - தன் நண்பனாகிய அரசனுக்குப் பகை வேந்தர்களால் இடையூறு நேர்ந்தவழி அவ்விடையூற்றைத் தீர்த்தற்பொருட்டுத் துணையாகத் தலைமகன் பிரிதல். 7. பொருள்வயிற் பிரிவு - தலைமகன் பொருள் ஈட்டுதல் காரணமாகப் பிரியும் பிரிவு. வகை இல்வாழ்க்கையின் வகை- 4. சூ. 202. 1. கிழவோன் மகிழ்ச்சி - தலைவன் மகிழ்ச்சி. இது தலைமகன் தலைவி முன் பாங்கியைப் புகழ்தலால் விளங்கும். 2. கிழத்தி மகிழ்ச்சி - தலைவியின் மகிழ்ச்சி. இது தலைவி தான் வருந்தாதிருந்ததன் காரணத்தைப் பாங்கிக்கு உரைத்தலால் விளங்கும். 3. பாங்கி மகிழ்ச்சி - தோழியினது மகிழ்ச்சி. இது, வரையும் நாளளவும் ஆற்றி இருந்தமையைத் தலைவியையும் தலைவனையும் தோழி வினாவுதலாலும், மணமனை வந்த செவிலிக்குத் தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள அன்பையும்உறவையும் அவர்களின் வாழ்க்கையின் நலத்தினையும் கூறுதலாலும் விளங்கும். 4. செவிலி மகிழ்ச்சி - செவிலியினது மகிழ்ச்சி. இது மணமனை சென்று வந்தசெவிலி நற்றாய்க்குத் தலைவியின் கற்பின் தன்மையையும் தலைவன் தலைவியர்களின் வாழ்க்கைத் தன்மையையும் அவ்விருவர் காதலையும் உணர்த்தலால் விளங்கும். பரத்தையிற் பிரிவின் வகை- 4. சூ. 204. 1. வாயில் வேண்டல் - பரத்தையிற் பிரிந்த தலைமகன் தோழியைத் தனக்கு வாயிலாகும்படி வேண்டல். 2. மறுத்தல் - தலைமகன் பாணன் முதலியவர்களை வாயிலாக அனுப்பத் தலைவி மறுத்தல். 3. வாயில் நேர்வித்தல் - தலைமகனை வாயிலை ஏற்றுக்கொள்ளும்படி செய்தல். 4. வாயில் நேர்தல் - தலைமகள்வாயிலை ஏற்றுக்கொள்ளுதல். (இவற்றின் கிளவிகளை
|