நோக்கி இவ்வகைகளை ஏற்றபடி ஆய்ந்துகொள்க.) ஓதற்பிரிவு முதலிய ஐந்து பிரிவுகளுக்கும் உரிய கிளவித் தொகைகளின் வகை- 9. சூ. 209. 1. பிரிவறிவுறுத்தல் - தலைவன் பிரிய விருத்தலைத் தோழி தலைவிக்கு உணர்த்தல். 2. பிரிவுடன்படாமை - தலைவன் பிரிவுக்குத் தலைவி உடன்படாமை. 3. பிரிவுடன்படுத்தல் - பாங்கி தலைவன் பிரிவுக்குத் தலைவியை உடன்படச் செய்தல். 4. பிரிவுடன்படுதல் - தலைவன் பிரிவுக்குத் தலைவி உடன்படுதல். 5. பிரிவுழிக் கலங்கல் - தலைவன் பிரிந்துழித் தலைவி வருந்துதல். 6. வன்புறை - பிரிவுழி வருந்தும் தலைவியை இகுளை இடித்துக் கூறுதல். (169ஆம் சூத்திரத்தில் வந்துள்ள வன்புறையை நோக்குக.) 7. வன்பொறை - தலைவன் பிரிவைத் தலைவி வலிதிற் பொறுத்தல். (169 ஆம் சூத்திரத்தில் வந்துள்ள வன்பொறையையும் நோக்குக.) 8. வருவழிக் கலங்கல் - தலைவன் மீண்டுவரும் வழியில் தலைவியின் நிலையை எண்ணி வருந்துதல். 9. வந்துழி மகிழ்ச்சி - தலைவன் வந்தபோது தலைவியும் தோழியும் மகிழ்தல் (இவற்றையும் இவற்றிற்குரிய கிளவிகளை நோக்கி அமைத்துக் கொள்க.)
|