4

தொகு....நிறீஇ என்பது, அவ்விலக்கண இலக்கியங்களுட் கலந்து கிடந்த கிளவிகளைச் சேர்த்து அடைவுடன் நிறுத்தி எ - று.

சூத்திரம் வகுத்தாங்கு என்பது, அவ்வடைவிற்கு ஏற்பச் சூத்திரஞ் செய்து எ - று.

அகப்...படுத்து என்பது, அந்நூற்கு அகப்பொருள் விளக்கம் என்று ஒரு பெயரை வெளிப்படுத்தி எ - று.

இருளற....எழுதினன் என்பது, மயக்கந் தீர உரையைப் பரப்பி எழுதினன் எ - று.

மாந்தரும்....வாழ்த்த என்பது, மனிதரும் அமரரும் துதிக்க எ - று.

முக்குடைக்கீழ், 1முக்குடையின் கீழ் எ - று.

ஏந்....மிசை என்பது, உயர்ந்த அழகினையுடைய சிங்கஞ்சுமந்த பொன்னணை மேல் எ - று.

மதி....இருந்து என்பது, நிறைமதி மூன்று கவிப்ப உதயம் என்னும் பெரிய மலையின் கண்ணே இளஞாயிறொன்று இருந்தாற் போல அழகுதக இருந்தருளி எ - று.

தத்துவம்....மைந்தன் என்பது, உண்மைப்பொருளை அருளிச் செய்தோனுடைய திருவடிகளைச் சேர்ந்த மேலோன் என்றும், திருப்புளிங்குடி என்னும் ஊரகத்துத் தோன்றிய உய்யவந்தான் என்றுஞ் சொல்லப்படா நின்ற முத்தமிழாசானுடைய மைந்தன் எ - று.

இத்தல....குரிசில் என்பது, இவ் வுலகத்தின்கண் உண்டாய ஆரியம் முத்தமிழ் என்னும் இரண்டு கலைக்கும் ஒரு பெரிய நாயகன் எ - று.

பால்....என்பவனே என்பது, பாற்கடல்போலும் பலவாகிய புகழைப் பரப்பின நாற்கவிராசநம்பி என்னும் பெயருடையோன் எ - று.


1. "முச்சக நிழற்று முழுமதி முக்குடை" என்றார் பவணந்தி முனிவர் ;(நன். சொ. சூ: 1.)

"பொன்னுநன் மணியுமுத்தும் பொலிந்தமுக் குடைநிழற்ற" என்றார் மண்டலபுருடர் (சூ. நி. பா. செ: 1.)

அம் முக்குடைகளாவன: சந்திராதித்தியம், நித்திய விநோதம், சகலபாசனம் என்பன.