40

(இ - ள்.) பாணன் முதலாக ஆற்றாமை ஈறாகச் சொல்லப்பட்ட இவையனைத்துந் தலைமகள் ஊடலைத் தீர்க்கும் வாயில்களாம் என்றவாறு.

இதனுள் உயர்திணையும் அஃறிணையும் விரவி யெண்ணி இவையென அஃறிணையால் தொகை கொடுத்தது என்னை?

1"பலவயி னானு மெண்ணுத்தினை விரவுப்பெயர்
அஃறிணை முடிபின செய்யு ளுள்ளே"

என்றாராகலின்.

(68)

ஓதற்பிரிவு; வேதம் ஓதற்கு உரியார்

69. ஓதற் றொழிலுரித் 2துயர்ந்தோர் மூவர்க்கும்.

(இ - ம்.) ஓதற்றொழிற்கு உரியதொரு சிறப்பு உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)3"ஓதலென்னுந் தொழில் அந்தணர், அரசர், வைசியர் என்கிற மூவர்க்கு முரித்து என்றவாறு.

(69)

ஏனைக் கல்விக்கு உரியர்

70. அல்லாக் கல்வி எல்லார்க்கும் உரித்தே.

(இ - ம்.) ஒழிந்த கல்வியது தன்மை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) வேதமல்லாத கல்வி நால்வர்க்கும் உரித்து என்றவாறு.

(70)

படைக்கலம் முதலியன பயிலுதற்கு உரியார்

71. படைக்கலம் பயிறலும் பகடுபிற ஊர்தலும்
உடைத்தொழி லவர்க்கென உரைத்திசி னோரே.

(இ - ம்.) நாவினாற் கற்குங் கல்வி அல்லாத தொழிலுரிமை உணர்த்துதல் நுதலிற்று.


1. தொல், சொல், கிளவியாக்கம். சூ: 51.

2. உயர் மூவர்க்கும் என்றும் பாடம்.

3. ஓதல் என்றது வேதம் ஓதலை. வேதம் ஓதல் அந்தணர் முதலிய மூவர்க்கும் உரித்து என்றதற்கு வேதம் ஓதற்குப் பிரிதல், அம் மூவர்க்கும் உரித்து என்பது கருத்தாம் என்று கொள்க. பிரிவின்கண் இவ்வாறு கூறப்படும் மற்றவற்றிற்கும் இங்ஙனமே கருத்துக் கொள்க.