அஃதாயினவாறென்னை யெனின், 1"மூன்றன் பகுதியு மண்டிலத் தருமையும் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் பாசறைப் புலம்பலும்" என்னும் இலக்கணத்தான் ஆயிற்றெனக் கொள்க. (93) கற்புக் காலத்துத் தலைமகளுக்கு உரிய ஒழுகலாறு 94. பூத்தமை சேடியிற் புரவலற் குணர்த்தலும் நீத்தமை பொறாது நின்றுகிழ வோனைப் பழிக்குங் காமக் கிழத்தியைக் கழறலும் கிழவோற் கழறலும் வழிமுறை மனைவியைக் கொழுநனொடு வந்தெதிர் கோடலும் அவனொடு பாங்கொடு பரத்தையைப் பழித்தலும் நீங்கிப் புறநகர்க் கணவனொடு போகிச் செறிமலர்ச் சோலையுங் காவும் மாலையங் கழனியும் மாலைவெள் ளருவியும் மலையுங் கானமும் கண்டுவிளை யாடலும் கடும்புனல் யாறும் வண்டிமிர் கமல வாவியும் குளனும் ஆடிவிளை யாடலுங் கூடும் கிழத்திக்கு. (இ - ம்.) தலைமகட்குக் கற்புக்காலத்துரிய ஒழுகலாறெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) பூத்தமை சேடியிற் புரவலற்குணர்த்தல் முதலாகக் குளனாடல் ஈறாகச் சொல்லப்பட்டனவெல்லாங் கற்புக்காலத்துத் தலைமகட்குப் பொருந்தும் என்றவாறு. கற்பென்பது அதிகாரத்தான் வந்தது. இவற்றுக்கு உதாரணம் மேலே காட்டப்படும். (94) வாயில்களுள் பாணர்க்கு உரிய செயல் 95. வாயில் வேண்டலும் 2வாயினேர் வித்தலும் சேயிழை யூடல் தீர்த்தலும் போயுழி அவணலந் தொலைவுகண் டழுங்கலும் 3அவன்வயிற்
1. இதன் இடம் விளங்கவில்லை. 2. வாயில் நேர்வித்தல். 3. அவள்வயிற் செல்லவிரும்பலும் சென்றவர்க்குணர்த்தலும் என்றும் பாடம்.
|